மாதத்திற்கு 1 லட்சம் பேர் வாங்கும் பைக்கில் இதைதான் எதிர்பார்த்துக்கிட்டு இருந்தோம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் 2-வீலர்களை விற்பனை செய்யும் நம்பர் ஒன் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் 2-வீலர் என்றால், அது ஹீரோ ஸ்பிளெண்டர் (Splendor) பைக் ஆகும். ஸ்பிளெண்டருக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுவது என்றால், அது ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக் ஆகும்.

ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 1 லட்சத்திற்கும் அதிகமான எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது. இந்த நிலையில், எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக, புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ (HF Deluxe Pro) பைக்கை ஹீரோ நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

hero motocorp launches hf deluxe pro bike

ரூ.73,550 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ பைக் இந்தியா முழுவதும் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் டீலர்ஷிப் ஷோரூம்களில் கிடைக்கும். வழக்கமான எச்.எஃப் டீலக்ஸ் பைக்கை காட்டிலும் ஸ்டைலிஷான தோற்றத்தில், நம்பகமான செயல்படுதிறன் உடன் புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ பைக்கை உருவாக்கி உள்ளதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வகையில், ஷார்ப்பான பாடி கிராஃபிக்ஸ், பைக்கை சுற்றிலும் க்ரோம் ஹைலைட்கள் மற்றும் பிரிவிலேயே முதல் பைக்காக எல்இடி ஹெட்லைட்டை புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ பைக் பெற்று வந்துள்ளது. இதில், எல்இடி ஹெட்லைட் சிஸ்டத்தில் பல்ப் ஆனது கிரீடம் போன்றதான டிசைனில் வழங்கப்பட்டுள்ளது.

hero motocorp launches hf deluxe pro bike

ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள டிஜிட்டல் ஸ்பீடோமீட்டரில் பயணம் குறித்த விபரங்களை ஒவ்வொரு வினாடிக்கும் காணலாம். இந்த வகையில், பெட்ரோல் குறைந்துக் கொண்டே வருவது தொடர்பான எச்சரிக்கைகளையும் பெற முடியும் என்பதால், தினசரி பயணத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள முடியும் என்கிறது ஹீரோ நிறுவனம்.

புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ பைக்கில் வழங்கப்பட்டுள்ள மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், 18-இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள், பின் சக்கரத்தில் 130மிமீ டிரம் பிரேக் மற்றும் 2-ஸ்டெப்களில் அட்ஜெஸ் செய்யக்கூடிய பின்பக்க சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை சொல்லலாம். மற்றப்படி, இந்த புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ பைக்கிலும் வழக்கமான 97.2சிசி என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது,

hero motocorp launches hf deluxe pro bike

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தனித்துவமான ஐ3எஸ் (ஐடியல் ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டம்) உடன் உருவாக்கப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7.9 பிஎச்பி மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் சிஸ்டத்தில் அமைந்துள்ள பாகங்கள் உராய்வுகள் அற்றதாகவும், டயர்கள் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவைகளாகவும் இருப்பதால் இந்த பைக்கில் சிறந்த செயல்படுதிறனை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரிய பைக்குகளுள் ஒன்றாக எச்.எஃப் டீலக்ஸ் இருக்கும் நிலையில், அதில் புதிய எச்.எஃப் டீலக்ஸ் புரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது நிச்சயமாக இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல அசத்தலான அம்சங்கள் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 23, 2025, 11:20 [IST]
English summary
Hero motocorp launches new hf deluxe pro bike price features all details here
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X