2 லட்ச ரூபாய்க்கு செம்ம வொர்த்து... ஆர்பாட்டம் பண்ணாம ஹீரோ கம்பெனி சைலண்ட்டா கொண்டுவந்த பைக்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. ஹீரோ நிறுவனம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு ஸ்பிளெண்டர் (Splendor), கரீஸ்மா (Karizma) போன்ற பிரபலமான பைக்குகள் முக்கியமான காரணமாகும். இதில், கரீஸ்மா பைக்கை நீண்ட வருடங்களுக்கு பின் கடந்த 2023ஆம் ஆண்டில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மார்க்கெட்டில் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவந்தது. 'கரீஸ்மா' பெயருக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக மீண்டும் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 (XMR 210) பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மேம்படுத்தப்பட்ட 2025 ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 பைக்கை புதிய வசதிகள் உடன் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக, பேஸ் (Base) மற்றும் டாப் (Top) என்கிற இரு வேரியண்ட்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கில் புதியதாக காம்பட் (Combat) என்கிற வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

hero motocorp launches new karizma

இதற்குமுன், கரீஸ்மா பைக்கின் விலைமிக்க வேரியண்ட்டாக இருந்த டாப் வேரியண்ட்டை காட்டிலும் இந்த காம்பட் வேரியண்ட் விலைமிக்கதாக கொண்டுவரப்பட்டுள்ளது. புதிய காம்பட் வேரியண்ட் ஆனது பிரத்யேகமான காம்பட் கிரே நிறத்தில் கிடைக்கும். இந்த புதிய கிரே நிறத்தை ஹைலைட்டாக சுட்டிக்காட்டியே 2025 கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கை ஹீரோ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.

விலைமிக்க டாப் வேரியண்ட்டில் கிடைத்துவரும் தலைக்கீழான முன்பக்க ஃபோர்க், ஹேண்டில்பாருக்கு மத்தியில் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி உடன் 4.2-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்டவை புதிய காம்பட் வேரியண்ட்டிலும் வழங்கப்பட்டுள்ளன. இதில், இந்த 4.2-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையை சமீபத்தில் அறிமுகம் செய்த புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கிலும் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்து இருந்தது.

hero motocorp launches new karizma

2025 ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கின் புதிய எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1 லட்சத்து 81 ஆயிரத்து 400இல் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. இந்த ரூ.1,81,400 ஆனது பைக்கின் பேஸ் வேரியண்ட்டின் விலை ஆகும். டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,99,750 ஆகவும், காம்பட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,01,500 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.

இதில், பேஸ் மற்றும் டாப் வேரியண்ட்களை ஐகானிக் மஞ்சள், டர்போ சிவப்பு மற்றும் மேட் பாண்டோம் கருப்பு என்கிற 3 விதமான கலர் ஆப்ஷன்களில் வாங்கலாம். இதில் பேஸ் வேரியண்ட்டில் டிஎஃப்டி டிஸ்பிளே மற்றும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கை பெற முடியாது. இவற்றை மற்ற 2 வேரியண்ட்களிலும் பெறலாம்.

hero motocorp launches new karizma

2025 ஹீரோ எக்ஸ்ட்ரீம் எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கிலும் வழக்கமான 210சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது. புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கின் அறிமுகத்தின் மூலம் முதல்முறையாக கடந்த ஆண்டில் தனது முதல் லிக்யுடு-கூல்டு என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம் செய்தது.

அதிகப்பட்சமாக 25.15 பிஎச்பி மற்றும் 20.4 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. இந்த 2025ஆம் வருடத்திற்குள், 250சிசி என்ஜின் உடன் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்250 பைக்கையும் அறிமுகம் செய்ய ஹீரோ மோட்டோகார்ப் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கில் இருந்து பெரும்பாலான பாகங்கள் உடன் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்250 உருவாக்கப்பட உள்ளது.

hero motocorp launches new karizma

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்210 பைக்கிற்கு 2000ஆம் காலக்கட்டத்தில் இருந்த வரவேற்பு கூட இப்போது கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதன் காரணமாகவே, கடந்த 2023 ஆகஸ்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பைக்கை மீண்டும் அப்டேட் செய்து தற்போது ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 20:30 [IST]
English summary
Hero motocorp launches new karizma xmr210 bike in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X