ஹீரோ ஷோரூமில் எப்போதும் நிரம்பி வழியும் கஸ்டமர்ஸ் கூட்டம்! 2-வீலர் உற்பத்தி ஆலை ஓய்வில்லாமல் ஓடிட்டு இருக்கு!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய உலகின் பிரம்மாண்டமான 2-வீலர் நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் உள்ளது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹீரோ நிறுவனத்தில் இருந்து கடந்த 2025 மே மாதத்தில் எத்தனை 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன? அவற்றுள் பைக்குகள் எத்தனை? ஸ்கூட்டர்கள் எத்தனை? என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஹீரோ மோட்டோகார்பின் அடையாளமே அதன் ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகள் ஆகும். மாதத்திற்கு ஏறக்குறைய சுமார் 2 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகளை அசால்ட்டாக ஹீரோ நிறுவனம் விற்பனை செய்கிறது. இன்னும் சொல்லப்போனால், புதிய பைக்குகளின் வருகையால் கடந்த சில வருடங்களில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை சற்று குறைந்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்பில் இருந்து என்னென்ன மாடல்கள் கடந்த மே மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அது வெளிவந்தால்தான், கடந்த மாதத்தில் எத்தனை ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரம் தெரியவரும். மொத்தமாக கடந்த மே மாதத்தில் 5 லட்சத்து 7 ஆயிரத்து 701 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.
அதுவே, கடந்த 2024 மே மாதத்தில் 4 லட்சத்து 98 ஆயிரத்து 123 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஹீரோ 2-வீலர்கள் விற்பனை ஆனது 1.91% அதாவது 9,578 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஹீரோவில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 5 லட்சத்து 7 ஆயிரத்து 701 ஹீரோ 2-வீலர்களில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என இரண்டும் அடங்குகின்றன.

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனங்களை போன்று வெளிநாட்டு ஏற்றுமதியை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெரிதும் சார்ந்திருக்கவில்லை. இருப்பினும், கடந்த மே மாதத்தில் ஹீரோ நிறுவனம் இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்த 2-வீலர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 704 ஆகும்.
ஆனால், வெளிநாட்டு ஏற்றுமதி எண்ணிக்கை ஆனது ஹீரோ மோட்டோகார்பின் உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையில் 100இல் 4% கூட கிடையாது. அந்த அளவிற்கு, சுமார் 4 லட்சத்து 88 ஆயிரத்து 997 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2024 மே மாதத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 450 இருசக்கர வாகனங்களை மட்டுமே இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது.

ஹீரோவின் வெளிநாட்டு ஏற்றுமதியில் 2024 மே மாதத்துடன் ஒப்பிடுகையில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. வெளிநாட்டு ஏற்றுமதியை காட்டிலும் உள்நாட்டு விற்பனையை தான் பெரிதும் நம்பியிருப்பதுபோல், ஹீரோ நிறுவனத்தின் நம்பிக்கைக்கு உரியவைகளாக பைக்குகளே உள்ளன. ஹீரோவில் இருந்து ஸ்கூட்டர்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஆனால், அவை குறைவான எண்ணிக்கை மட்டுமே ஆகும்.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பைக்குகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 164 ஆகும். அதுவே, 2024 மே மாதத்தில் 4 லட்சத்து 71 ஆயிரத்து 186 ஹீரோ பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல், 2024 மே மாதத்தில் 26 ஆயிரத்து 937 ஹீரோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் 32 ஆயிரத்து 537 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விற்பனை பெரும்பாலும் உச்சத்தில் இருப்பதுதான் வழக்கம். ஆனால், கடந்த 2025 ஏப்ரல் மாத விற்பனையில் ஒரேடியாக சறுக்கி அந்த மாதத்தில் மொத்தமாகவே வெறும் 3 லட்ச இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இது இந்திய ஆட்டோமொபைல் துறையில் பெரிய செய்தியாக மாறிய நிலையில், அதற்கு வட்டியும் முதலுமாக கடந்த மே மாதத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான 2-வீலர்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









