75 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கை இந்த ரேட்ல விக்கறாங்களா! ஷோரூம்ல திருவிழா மாதிரி கூட்டம் ஜேஜேன்னு இருக்கு!

இந்திய சந்தையில் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) முதன்மையானது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus) முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

இந்த ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக், நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் வெறும் 13,100 ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

Hero Passion Plus Side Design

ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த எண்ணிக்கை 26,249 ஆக உயர்ந்துள்ளது. இது 100.37 சதவீத வளர்ச்சி ஆகும். அதாவது விற்பனை அப்படியே இரட்டிப்பாகியுள்ளது. இதன் மூலம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 பைக்குகளின் பட்டியலில் (Top 10 Bikes June 2025), ஹீரோ பேஷன் ப்ளஸ் 9வது இடத்தை பிடித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தின்படி பார்த்தால், தற்போதைய நிலையில் ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலை 82,451 ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.

Hero Passion Plus

ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கில், 97.2 சிசி ஏர் கூல்டு 4 ஸ்ட்ரோக் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் பவர் அவுட்புட் 5.9 kW பவர் ஆகவும், 8.05 Nm டார்க் ஆகவும் உள்ளது. ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் ஒரு லிட்டருக்கு 60-75 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்குவதாக, அதை பயன்படுத்தி வரும் பலரும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் பைக்கை ஒருவர் ஓட்டும் விதம் உள்ளிட்ட விஷயங்களை எல்லாம் பொறுத்து, மைலேஜ் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கின் மைலேஜ் மிகவும் சிறப்பாக இருப்பதற்கு, அதில் வழங்கப்பட்டுள்ள ஐ3எஸ் (i3S) தொழில்நுட்பம் முக்கியமான காரணங்களில் ஒன்றாகும்.

idle Stop-Start System என்பதன் சுருக்கம்தான் ஐ3எஸ். பைக் ஐட்லிங்கில் இருக்கும்போது, இந்த தொழில்நுட்பம் இன்ஜினை ஆஃப் செய்து விடும். பின்னர் தேவைப்படும்போது நீங்கள் க்ளட்ச்சை அழுத்தினால், இன்ஜின் மீண்டும் ரீ-ஸ்டார்ட் ஆகி விடும். செயல்திறனில் சமரசம் செய்து கொள்ளாமல், சிறப்பான மைலேஜ் கிடைப்பதற்கு, இந்த தொழில்நுட்பம் உதவி செய்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கில் செல்போன் சார்ஜிங் போர்ட், சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் ஸ்டைலான கிராஃபிக்ஸ் உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன. எனவே இது நீங்கள் வழங்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கில், 11 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 168 mm ஆக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2025, 23:57 [IST]
English summary
Hero passion plus sales report june 2025 100 37 per cent growth
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+