ஸ்கூட்டர்னு ஒன்னு வாங்கினா எல்லாரும் ஹீரோவின் இந்த ஸ்கூட்டரை-தான் வாங்குவாங்க போல.. வீலோட அழகே வேற லெவல்!
இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), புதுமுக வாகனம் ஒன்றிற்கான டீசர் படத்தை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படம் ஜூம் 160 (Xoom 160) மாடலுடையது என்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் முன் பக்க வீலின் அழகை வெளிக்காட்டும் வகையிலேயே தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படம் அமைந்திருக்கின்றது. மேலும், முழுமையாக விரைவில் தொடங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் இது காட்சிப்படுத்தப்படும் என தெரிகின்றது.
முன்னதாக இஐசிஎம்ஏ 2024 (EICMA 2024)-இல் இந்த ஸ்கூட்டர் மாடல் காட்சிப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் மாடலை முழுமையாக வெளியீடு செய்யும் முன்னரே இரண்டு சக்கர வாகன காதலர்களைக் கவரும் நோக்கில் டீசர் படம் வெளியிடப்பட்டு இருக்கின்றது.

ஏற்கனவே கூறியதைப் போல ஜூம் 160 ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதேவேளையில், அதற்கு அட்வென்சர் டூ-வீலர் லுக்கை வழங்கக் கூடிய அம்சங்களே மிக அதிக அளவில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த தனித்துவ ஸ்டைலிங் காரணமாக விற்பனையிலும் இந்த ஸ்கூட்டர் மாடல் வாடிக்கையாளர்களைக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கேற்பவே அதற்கு மிகவும் முரட்டுத் தனமான தோற்றமும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது குறிப்பாக இளைஞர்களை மிகப் பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினைப் பொருத்த வரை இந்த ஹீரோவின் இந்த ஜூம் 160 ஸ்கூட்டரில் 156 சிசி சிங்கிள் சிலிண்டர், சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 8 ஆயிரம் ஆர்பிஎம்மில் 14 பிஎச்பி-யையும், 6 ஆயிரம் ஆர்பிஎம்மில் 13.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என்பது கவனிக்கத்தகுந்தது. சிவிடி கியர்பாக்ஸ் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இந்த ஸ்கூட்டரை இயக்குவதில் பெரிய அளவில் சிரமம் இருக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதேபோல், ரைடை சுவராஷ்யமானதாக மாற்றக் கூடிய அம்சங்களையும் இதில் மிக தாராளமாக எதிர்பார்க்கலாம். அந்தவகையில், முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரண்டு ஸ்பிரிங் சஸ்பென்ஷனுமே எதிர்பார்க்கப்படுகின்றன. இதேபோல், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த ஸ்கூட்டரின் முன் பக்கத்தில் டிஸ்க்கும், பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.
ஹீரோ ஜூம் 160 இந்தியாவில் விற்பனைக்கு வரும்பட்சத்தில் யமஹா ஏரோக்ஸ் 155 போன்ற மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களுக்கு மிகப் பெரிய அளவில் போட்டியாக அமையும் என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த ஸ்கூட்டரை ரூ. 1.20 லட்சத்திற்கும் குறைவான விலையில் ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதன் துள்ளியமான வருகை நாள் பற்றிய விபரம் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இன்றைய தினமே இதன் விலைகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விபரங்களை ஹீரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஹீரோ நிறுவனம் இன்றைய தினத்தில் ஜூம் 160 ஸ்கூட்டரை மட்டுமல்ல இன்னும் பல்வேறு புதுமுக டூ-வீலர் மாடல்களை வெளியீடு செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கல்லூரி மாணவர்கள் உட்பட இளம் தலைமுறையினரைக் கவரும் நோக்கில் ஜூம் 160 மாடலை இந்தியாவில் களமிறக்கும் பணியில் ஹீரோ மோட்டோகார்ப் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








