ஹீரோ ஸ்பிளெண்டரை தேசிய பைக்கா அறிவிச்சிடலாம்! பலா பழத்தில் ஈ மொய்க்குற மாதிரி கஸ்டமர்ஸ் குவியுறாங்க

இந்தியா ஓர் பைக்குகளின் தாயகம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு நம் நாட்டில் பைக்குகளை பயன்படுத்துவோர் அதிகமாக உள்ளனர். கார் வாங்கும் அளவிற்கு நம்மில் நிறைய பேரிடம் பணம் இல்லாததும் இதற்கு ஒரு காரணமாக சொல்லலாம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2025 ஜனவரி மாதத்திலும் சுமார் 10 இலட்சம் பைக்குகள் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மக்கள் பலரால் வாங்கப்பட்ட டாப்-10 பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே மக்கள் நிறைய பேர் விரும்பி வாங்கக்கூடிய பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) விளங்குகிறது. இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு ஸ்கூட்டர்களை கணக்கில் எடுத்து பார்த்தால் கூட, இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலராக ஸ்பிளெண்டர் உள்ளது.

hero splendor most selling bike

நடந்து முடிந்த கடந்த 2025 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 59 ஆயிரத்து 431 ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஸ்பிளெண்டர் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், கடந்த ஆண்டு ஜனவரியை விட இந்த ஆண்டு ஜனவரியில் 4,309 ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் 1 லட்சத்து 92 ஆயிரத்து 438 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் உள்ள பைக், ஹோண்டா ஷைன் (Honda Shine) ஆகும். கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 68 ஆயிரத்து 290 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

hero splendor most selling bike

2024 ஜனவரியில் 1 லட்சத்து 45 ஆயிரத்து 252 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2024 டிசம்பரில் இன்னும் குறைவாக ஏறக்குறைய 1 லட்சம் ஷைன் பைக்குகளை மட்டுமே ஹோண்டா விற்பனை செய்திருந்தது. இந்த லிஸ்ட்டில் 3வது இடத்தில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) 1 லட்சத்து 4 ஆயிரத்து 81 பைக்குகள் விற்பனை உடன் உள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் வெறும் 65 ஆயிரத்து 571 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 4வது இடத்தில் மற்றொரு பிரபலமான ஹீரோ பைக்கான எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 62 ஆயிரத்து 223 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2024 ஜனவரியில் 78 ஆயிரத்து 767 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hero splendor most selling bike

இவற்றிற்கு அடுத்து 5வது மற்றும் 6வது இடங்களில் டிவிஎஸ் அப்பாச்சி மற்றும் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக்குகள் உள்ளன. இவற்றின் கடந்த ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 34,511 மற்றும் 30,582 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 4 இடங்களில் முறையே டிவிஎஸ் ரைடர் (27,382), பஜாஜ் பிளாட்டினா (27,336), ஹோண்டா சிபி யூனிகார்ன் 150 (26,509) மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (21,870) பைக்குகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த அனைத்து 10 பைக்குகளின் விற்பனையும் கடந்த ஆண்டு டிசம்பரை காட்டிலும் கடந்த ஜனவரி மாதத்தில் அதிகரித்துள்ளது. இதில் இருந்து, வருட துவக்கத்தில்தான் பலர் புதியதாக பைக் வாங்க விரும்புகின்றனர் என்பதை அறிய முடிகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் விற்பனையில் இல்லாத ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 8:00 [IST]
English summary
Hero splendor most selling bike in india 2025 january
மேலும்... #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X