20 வருஷம் இல்ல... இன்னும் 50 வருஷமானாலும் இதை மாற்ற முடியாது! டிவிஎஸ் பைக் விற்பனை மல்லாக்க படுத்து கிடக்குது!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த நிறுவனம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகளை முக்கியமான காரணமாக சொல்ல வேண்டும். ஏனெனில், ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்படும் 2-வீலர்களில் 75% ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும். அந்த அளவிற்கு, இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனாலேயே, ஸ்பிளெண்டர், ஸ்பிளெண்டர் பிளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் என முடிந்தவரையில் பல விதமான மாடல்களில் ஸ்பிளெண்டர் பைக்குகளை விற்பனை செய்ய ஹீரோ மோட்டோகார்ப் முயற்சிக்கிறது. இதில் குறிப்பாக, ஸ்பிளெண்டர் பிளஸ் ஆனது இந்திய மார்க்கெட்டில் பிரபலமான ஸ்பிளெண்டர் பைக்காக விளங்குகிறது. சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வருகிறது.

hero splendor plus bike alternatives

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் சென்னை ஆன்-ரோடு விலை ஆனது தற்சமயம் ஏறக்குறைய ரூ.95 ஆயிரமாக உள்ளது. விற்பனையில் இந்த ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிவிஎஸ் ரேடியான், ஹோண்டா ட்ரீம் சிடி110 மற்றும் பஜாஜ் சிடி110எக்ஸ் உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக விளங்குகின்றன. ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலையில் கிடைக்கக்கூடிய இந்த 3 பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டிவிஎஸ் ரேடியான் (TVS Radeon): டிவிஎஸ் மோட்டாரில் இருந்து பலரால் கண்டுக்கொள்ளப்படாத பைக், ரேடியான் ஆகும். மார்க்கெட்டில் முதன்முதலாக 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ரேடியான் பைக், அதன் ரெட்ரோ-ஸ்டைல் தோற்றத்தினால் ஆரம்பத்தில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. குறிப்பாக, அதிக மைலேஜை எதிர்பார்ப்போரின் சாய்ஸாக டிவிஎஸ் ரேடியான் விளங்கியது.

hero splendor plus bike alternatives

2018ஆம் சமயத்திலேயே ரிவர்ஸ் எல்சிடி (Reverse LCD) திரை மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் இண்டெலிகோ (Intelligo) போன்ற தொழிற்நுட்பங்கள் உடன் ரேடியான் பைக் உருவாக்கப்பட்டது ஆச்சிரியமாக பார்க்கப்பட்டது. அறிமுகம் செய்யப்பட்ட முதல் 7 மாதங்களிலேயே சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான ரேடியான் பைக்குகளை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்தது.

ஆனால் தற்போதுவரையில் 4 லட்சத்திற்கும் அதிகமான ரேடியான் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனைக்கும் இடையில் 2020இல் மற்ற டிவிஎஸ் 2-வீலர்களை போன்று ரேடியானும் பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டது. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் இந்த டிவிஎஸ் ரேடியான் பைக்கை பலரும் கண்டுக்கொள்ளவில்லை. இதன் விற்பனை இப்போதும் பெரிய அளவிற்கு இல்லை என்பது அதன் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிய வருகிறது.

இருப்பினும், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கிற்கு சரியான நேரெதிர் போட்டி பைக், டிவிஎஸ் ரேடியான் எனலாம். சென்னையில் தற்சமயம் இந்த டிவிஎஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை ஏறக்குறைய ரூ.87 ஆயிரமாக உள்ளது. டிரம் பிரேக் (Drum Brake) மற்றும் டிஸ்க் பிரேக் (Disc Brake) ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படும் ரேடியான் பைக்கின் விலைகள் ரூ.1 லட்சத்தையும் தாண்டி செல்கின்றன.

ஹோண்டா ட்ரீம் சிடி110 (Honda Dream CD110): டிவிஎஸ் ரேடியான் போல் இல்லாமல், இப்போதும் மக்கள் மத்தியில் இந்த விலை குறைவான ஹோண்டா பைக் பிரபலமானதாக உள்ளது. தோற்றத்தில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் உடன் ஒப்பிடுகையில் சற்று வேறுப்பட்டு தெரிந்தாலும், ரேடியான் பைக்கை இந்த ஹோண்டா பைக் பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது.

hero splendor plus bike alternatives

ஆனால் விலையை பொறுத்தவரையில், ரேடியானை காட்டிலும் சற்று விலைமிக்கதாக ட்ரீம் சிடி110 உள்ளது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை கிட்டத்தட்ட ரூ.96 ஆயிரமாக உள்ளது. ஸ்டாண்டர்ட் மற்றும் டீலக்ஸ் என இரு விதமான வேரியண்ட்களில் இந்த ஹோண்டா பைக் விற்பனை செய்யப்பட்டாலும், இரண்டும் பெயிண்ட் நிறத்தில்தான் வேறுப்படுகின்றன. அதாவது, டீலக்ஸ் வேரியண்ட் பார்ப்பதற்கு கொஞ்சம் பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது.

மற்றப்படி, இயந்திர பாகங்களில் இரண்டுமே ஒரே மாதிரியாக உள்ளன. அதாவது, என்ஜின், சஸ்பென்ஷன் & பிரேக் உள்ளிட்டவற்றில் இரண்டும் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த இரு வேரியண்ட்களிலும் டிரம் பிரேக்குகள் மட்டுமே வழங்கப் படுகின்றன. டிஸ்க் பிரேக் உடன் ஹோண்டா ட்ரீம் சிடி110 பைக்கை வாங்க முடியாது.

இந்த பைக்கில் பொருத்தப்படும் 109.51சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் அதிகப்பட்சமாக 7,500 ஆர்பிஎம்-இல் 8.67 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 9.30 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மென்மையான என்ஜின் ஸ்டார்ட்டிற்கு சைலண்ட் ஸ்டார்ட் தொழிற்நுட்பம் இந்த பைக்கின் என்ஜின் சிஸ்டத்தில் வழங்கப்படுகிறது.

பஜாஜ் சிடி110 எக்ஸ் (Bajaj CT 110X): இந்தியாவின் மிக விலை குறைவான பைக்கான பிரபலமான பஜாஜ் சிடி110 -இன் ஸ்போர்டியரான வெர்சனாக சிடி110எக்ஸ் 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. சிடி110 பைக்கை காட்டிலும் முரட்டுத்தனமான தோற்றத்தில், குறிப்பாக இளம் தலைமுறையினரை கவரக்கூடியதாக பஜாஜ் சிடி110எக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டது.

hero splendor plus bike alternatives

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் இந்த முயற்சி வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், கடந்த சில வருடங்களில் பலரும் சிடி110 எக்ஸ் பைக்கை வாங்கி உள்ளனர். சிடி110 பைக்கில் இருந்த நிறைய அம்சங்கள் உடன் சிடி110எக்ஸ் பைக்கை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் உருவாக்கியது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சிடி110 பைக்கில் வழங்கப்பட்டு வந்த வட்ட வடிவிலான ஹெட்லைட் & டெயில்லைட் மற்றும் பின்பக்கத்தில் பொருட்களை கட்டி எடுத்தும் செல்லும் பகுதியை அப்படியே சிடி110 எக்ஸ் பைக்கில் பஜாஜ் வழங்கியது. இவ்வளவு ஏன், சிடி110 பைக்கில் வழங்கப்பட்ட அதே 115.45சிசி, டிடிஎஸ்-ஐ என்ஜின் தான் சிடி110 எக்ஸ் பைக்கிலும் வழங்கப்படுகிறது.

அதிகப்பட்சமாக 8.48 பிஎச்பி மற்றும் 9.81 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கில் இரு சக்கரங்களிலும் இணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் (CBS) வழங்கப்படுகிறது. ஆனால், இந்த பஜாஜ் பைக்கிலும் இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்படுவது இல்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தனை பைக்குகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கை இவற்றால் விற்பனையில் நெருங்க கூட முடிவதில்லை. இதில் இருந்து ஸ்பிளெண்டர் பிளஸ் மக்கள் மத்தியில் எந்த அளவிற்கு வரவேற்பை பெற்று வருகிறது என்பதையும், மக்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு உள்ள மதிப்பையும் அறியலாம்.

More from DriveSpark

Article Published On: Monday, May 5, 2025, 23:59 [IST]
English summary
Hero splendor plus bike alternatives in indian market tvs radeon honda dream cd110 bajaj ct110x
மேலும்... #hero splendor #motorcycles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X