அடிமாட்டைவிட கம்மி விலையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் விற்பனைக்கு அறிமுகம்.. ரொம்ப சிம்பிளாவும், அழகாவும் இருக்கு!

இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), அடிமாட்டு விலையில் தன்னுடைய அப்டேட் செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor Plus) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் வரிசையில் உள்ள அனைத்தையும் அது புதுப்பித்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஸ்பிளெண்டர் பிளஸ் (Splendor+), ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Splendor+ XTEC) மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் 2.0 (Splendor+ XTEC 2.0) ஆகியவையே அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

அப்டேட் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் ரூ. 79 ஆயிரத்து 096 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். இது ஸ்பிளெண்டர் பிளஸ் டிரம் வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஸ்பிளெண்டர் அடித்தட்டு மக்களின் பிரியமான டூ-வீலர் மாடல் ஆகும்.

2025 hero splendor plus front profile pic

பலர் தங்களின் தினசரி பயன்பாட்டிற்காக இந்த பைக்கை பயன்படுத்தி வருகின்றனர். இத்தகைய பைக்கையே மலிவு விலையில் ஹீரோ நிறுவனம் இப்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதேநேரத்தில் இந்த 2025 ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் 2024 மாடலைக் காட்டிலும் ரூ. 1,800 முதல் ரூ. 2,500 வரையில் அதிக விலையுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

தொடர்ந்து, இந்த பைக்கில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டதாக தெரியவில்லை. அதேவேளையில், கிராஃபிக்குகளில் லேசாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை நம்மால் காண முடிகின்றது. எனவே இதன் பாடி பேனல்கள் சற்றே மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளிக்கின்றன. இதுமட்டுமல்ல குறிப்பிட்ட சில வேரியண்டுகளில் பின் பக்க லக்கேஜ் ரேக்கையும், சில கைப் பிடியையும் பெற்றிருக்கின்றன.

2025 hero splendor plus side view

தொடர்ந்து, எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்டல் வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் முன் பக்கத்தில் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களே இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமல்ல புதிய பிஎஸ் ஓபிடி-2பி தரத்திற்கு ஏற்பவும் இந்த பைக்கின் எஞ்சினில் மாற்றம் செய்திருக்கின்றனர்.

ஏப்ரல் 1 முதல் இந்த விதி கட்டாயமாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. எஞ்சினைப் பொருத்த வரை ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் 97.2 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.91 பிஎச்பி மற்றும் 8.05 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

2025 hero splendor plus rear view

4 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஹீரோ நிறுவனம் இப்போதைக்கு விடா எனும் பிராண்டின்கீழ் இ-ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விரைவில், இந்த ஸ்பிளெண்டர் பைக் மாடலிலும் அது எலெக்ட்ரிக் ஆப்ஷனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வருகைக்கு வெகுகாலம் எடுத்துக் கொள்ளாது என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏழை மற்றும் எளிய மக்களின் பிரியமான பிரியமான பைக் மாடலாக ஹீரோ ஸ்பிளெண்டர் இருக்கின்றது. இதனை அப்டேட் செய்து ஹீரோ நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, நிறுவனத்தின் இந்த செயலால் இந்த பைக்கின் விற்பனை வரும் நாட்களில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 10, 2025, 18:58 [IST]
English summary
Hero splendor plus my25 launch updated features and pricing starting at rs 79096
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X