சைலன்சர் இருக்குறது சும்மா தான்... லிட்டருக்கு 60கிமீ மைலேஜ் தரும் ஹீரோ பைக்கில் இதைதான் எதிர்பார்த்தோம்!

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), இந்தியாவின் தேசிய பைக் என அழைக்கும் அளவிற்கு மக்கள் பலரால் விரும்பி வாங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக சுமார் 2 லட்சம் ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதனாலேயே, அவ்வப்போது ஸ்பிளெண்டர் பைக்குகளை புதுசு, புதுசாக அறிமுகம் செய்ய ஹீரோ நிறுவனம் மறப்பது இல்லை. ஸ்பிளெண்டர் புரோ, ஸ்பிளெண்டர் பிளஸ் மற்றும் ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக் (Xtec) உள்ளிட்டவை எல்லாம் அவ்வாறு விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும்.

இந்த நிலையில், புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்யப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் விரைவில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் தற்போது 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் ஒன்று அறிமுகத்திற்கு முன்பாக சாலையில் ஓட்டிப் பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

2025 hero splendor plus spotted

ஹீரோ ஸ்பிளெண்டர் போன்ற விலை குறைவான பைக்குகளில் சமீப காலமாக பிரச்சனையாக மாறி வருவது மத்திய அரசாங்கம் அடுத்தடுத்து கொண்டுவரும் மாசு உமிழ்வு விதிமுறை கட்டுப்பாடுகள் ஆகும். வாகனங்களினால் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த விதிமுறைகள் அவ்வப்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மத்திய அரசின் பாரத் ஸ்டேஜ் 6 (BS6) 2ஆம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளில் ஒபிடி-2பி தரநிலைகள் பின்பற்றப்பட ஆரம்பித்தன. இந்த புதிய தரநிலைகளின் படி, வாகனங்களில் இருந்து வெளியேறும் காற்று மாசுவின் அளவை பழுதுகளை எச்சரிக்கும் அதிநவீன கருவியை வாகனத்தில் பொருத்தி கண்காணிக்க வேண்டும்.

2025 hero splendor plus spotted

வழக்கத்தை காட்டிலும் அதிக மாசுவை வாகனத்தின் என்ஜின் வெளியிட்டாலோ அல்லது மாசு உமிழ்வு குறித்து வேறு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலோ அதுகுறித்து டிரைவருக்கு எச்சரிக்கும் வசதி நிச்சயமாக வாகனத்தில் இருக்க வேண்டும். இதற்காக வாகனத்தின் ஆக்ஸிஜன் சென்சார்கள், கேடலிடிக் கன்வெர்டர், ஃப்யுல் சிஸ்டம், மிஸ்ஃபையர் டிடெக்‌ஷன் உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

இந்த ஒபிடி-2பி தரநிலைகளுக்கு ஏற்ப புதிய 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான், புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் கொண்டுவரப்படும் முக்கியமான அப்டேட் ஆகும். இந்த அப்டேட்டினால் பைக்கின் செயல்படுதிறனில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கிறோம்.

2025 hero splendor plus spotted

ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் 97.2சிசி, ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படும் இந்த என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 8.02 பிஎஸ் மற்றும் 8.05 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக் கூடியதாக உள்ளது.

இது தவிர்த்து புதிய ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் கொண்டுவரப்படும் மற்ற அப்டேட்கள் என்று பார்த்தால், தற்போது ஜெய்பூருக்கு அருகே மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனை ஓட்டத்தில் 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் பைக் சிவப்பு & கருப்பு என்கிற புதிய பெயிண்ட் ஆப்ஷனில் உள்ளது. தற்போதைய ஸ்பிளெண்டர் பிளஸ் உடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மாடலின் கிராஃபிக்ஸ் (Graphics) வேறுப்படுகிறது. இதுதவிர்த்து பைக்கின் சஸ்பென்ஷன் & பிரேக்கில் எந்த அப்டேட்டும் இருக்க வாய்ப்பில்லை.

2025 hero splendor plus spotted

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், 2025 ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கில் முக்கியமான அப்டேட்டாக ஒபிடி-2பி தரநிலைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதனை ஹோண்டா, டிவிஎஸ் மோட்டார் போன்ற முன்னணி 2-வீலர் நிறுவனங்கள் ஏற்கனவே தங்களது சில 2-வீலர்களில் கொண்டுவந்துவிட்டன. விரைவில் ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கிலும் கொண்டுவரப்படுவதால், ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் இந்த பைக்கின் விற்பனை மேலும் அதிகரிக்கும்.

Source: GaadiWaadi

More from DriveSpark

Article Published On: Monday, April 7, 2025, 10:25 [IST]
English summary
Hero splendor plus spotted during testing in jaipur spy images leaked
மேலும்... #hero motocorp #hero splendor #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X