இந்த பைக்கை வாங்க ஷோரூம்ல வரிசை கட்டி நிக்குறாங்க போல! ஒரே மாசத்துல இவ்வளவு வண்டி வித்துடுச்சா?
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்பொழுதும் டூவீலர்கள் மீதான டிமாண்ட் அதிகமாக இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்கள் சிறந்த பைக்குகளை நீண்ட ஆண்டுகளாக வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் தான் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
கடந்த ஜூலை மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் டாப் 10 பைக்ககள் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதில் இந்த முறை ஹீரோ நிறவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் தான் இரக்கிறது. இந்த பைக் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 2,46,715 பைக்குகள் வெளியாகியுள்ளன. இதுவே கடந்தாண்டு இதே காலகட்டத்தில் 2,20,820 பைக்குகள் விற்பனையாகியிருந்தது. தற்போது 11 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் ஷைன் பைக் தான் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஷைன் பைக் கடந்த ஜூலை மாதம் 1,59,658 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த பைக்கின் விற்பனை 2.29 சதவீதம் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்கை பொருத்தவரை 79,817 பைக்குகள் விற்பனையாகி 3வது இடத்தை பிடித்துள்ளது. 4வது இடத்தில் ஹீரோ நிறுவனத்தின் எச்எஃப் டீலக்ஸ் பைக் பைக் இருக்கிறது. இந்த பைக் 71,477 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இந்த பைக்கின் விற்பனை 53.30 சதவீதம் அதிகரித்துள்ளது.
5வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் அப்பாச்சி பைக் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 37,566 பைக்குகள் கடந்த ஜூலை மாதம் விற்பனையாகியுள்ளது. இது ஒரே ஆண்டில் 22.44 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. 6வது இடத்தில் ஹோண்டா யூனிகார்ன் பைக் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 33572 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இந்த பைக்கின் விற்பனவை 14.54 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

7வது இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் பிளாட்டினா பைக் இருக்கிறுது.இந்த பைக் மொத்தம்29424 பைக்குகள் விற்பனையாகியுள்ளது. இந்த பைக் 1.72 சதவீத விற்பனவை வளர்ச்சியை பெற்றள்ளது. 8வது இடத்தில் பஜாஜ் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 26,516 பைக்குகள் விற்பனையாகியுள்ளது.
9வது இடத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் ரைடர் பைக் இருக்கிறது. இ்நத பைக் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 24,511 பைக்குகள் விற்பனையாகியுள்ளன. இது இந்நிறுவனத்தின் 0.15 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்று தந்துள்ளது. 10வது அதாவது கடைசி இடத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்டர் பைக் இருக்கிறது. இந்த பைக் கடந்த ஜூலை மாதம் 18,373 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

ஹீரோவின் ஸ்பிளெண்டர் பைக் செமி அர்பன் மற்றும் ரூரல் ஏரியாக்களில் அதிகம் பயன்படுத்தக்கூடிய வசதி கொண்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக் கடந்த 1994ம் ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகி வருகிறது. சிடி 100 பைக்கிற்கு மாற்றாக இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பல்வேறு காஸ்மெட்டிக் மற்றம் ஸ்டைலிங் அப்டேட்கள் பெறப்பட்டுள்ளன. முதலில் 97சிசி இன்ஜின் உடன் வந்த இந்த பைக் தற்போது 110 சிசி இன்ஜின் உடன் விற்பனையாகிறது.
இந்த பைக்கில் ஹீரோ நிறுவனம் ஐ3எஸ் ஸ்டார்ட் ஸ்டாப் தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் சூப்பர் ஸ்பிளெண்டர் வெர்ஷன் பைக் 125 சிசிஇன்ஜின் உடன் விற்பனையாகி வருகிறது. சுமார் 30 ஆண்டுகளாக இந்த பைக் விற்பனையாகி வருவதற்கு முக்கியமான காரணம், நம்பகதன்மை, அதிக மைலேஜ், மற்றும் குறைவான பராமரிப்பு செலவும் ஒரு காரணமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர்கள் விற்பனை சிறப்பாக நடந்து வரும் நிலையில் மக்கள் பலர் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை அதிகம் விரும்பி வருகின்றனர். நீண்ட ஆண்டுகளாக இந்த பைக் தான் நம்பர் 1 விற்பனையில் இருக்கிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









