டிவிஎஸ் எக்ஸ்.எல் விலை கூட இதைவிட அதிகம்! 45 ஆயிரம் ரூபாயில் ஹீரோ இ-ஸ்கூட்டர்... குறுகிய கால சலுகை!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே 'விடா' (Vida) என்கிற நிறுவனத்தை நிறுவி, தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹீரோ விடாவில் இருந்து முதலாவதாக வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வி.எக்ஸ்2 (VX2) அறிமுகம் செய்யப்பட்டது. வெறும் ரூ.59 ஆயிரத்து 490இல் அறிமுகம் செய்யப்பட்டதால் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மக்களிடம் இருந்து பலத்த கவனம் உருவானது. இந்த நிலையில், இந்த விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேலும் குறைத்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது.
எலக்ட்ரிக் வாகனங்களில் BaaS என்கிற பெயரில் பேட்டரியை குத்தகை முறையில் வழங்கும் பழக்கம் ஆனது சமீப காலமாக வெளிநாடுகளை கடந்து இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. அதாவது, எலக்ட்ரிக் வாகனத்தை உருவாக்கிய நிறுவனத்தால் நிறுவப்பட்ட அருகில் உள்ள மையத்தில் சார்ஜ் காலியான பேட்டரியை குறிப்பிட்ட தொகை கட்டணத்துடன் கொடுத்து, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம்.

எந்த அளவிற்கான சார்ஜை பயன்படுத்தினோம் என்பதை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும். இது கிட்டத்தட்ட சமையல் எரிவாயு சிலிண்டரை வாங்கும் முறையாகும். BaaS மூலமாக பேட்டரி சார்ஜ் நிரம்புவதற்காக காத்திருக்க வேண்டிய நேரம் தவிர்க்கப்படுவது மட்டுமின்றி, எலக்ட்ரிக் வாகனங்களின் விலைகளும் பேட்டரியை கணக்கில் சேர்க்காததால் குறைவாக நிர்ணயிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுவருவதை காட்டிலும், BaaS முறை இந்தியாவில் நல்ல வரவேற்பை பெறும் என நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். அதன்படி, BaaS முறையை பெரிய அளவில் கையில் எடுத்து எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் வெற்றி பெற்றது. அந்த வரிசையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் அதன் புதிய விடா வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக BaaS முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளது.

BaaS திட்டத்தின்படி, புதிய விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.54,490 நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது குறுகிய கால சலுகையாக இந்த விலையிலும் ரூ.15,000 குறைத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக, வெறும் ரூ.44 ஆயிரத்து 990இல் வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.
கோ (Go) மற்றும் பிளஸ் (Plus) என இரு விதமான வேரியண்ட்களில் விடா வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட ரூ.44,990 ஆனது கோ வேரியண்ட்டின் சலுகை விலை ஆகும். பிளஸ் வேரியண்ட்டின் விலை அறிமுகத்தின்போது ரூ.64 ஆயிரத்து 990 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து தற்போது ரூ.7,000 குறைத்து கொள்ளப்பட்டுள்ளது.

இதனால், விஎக்ஸ்2 பிளஸ் வேரியண்ட்டின் சலுகை ரூ.57 ஆயிரத்து 990 ஆகும். விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை போன்று பேட்டரி உடனும் வாங்கலாம். அதாவது, BaaS இல்லாமல் பேட்டரி உடன் விஎக்ஸ்2 கோ வேரியண்ட்டின் சலுகை விலை ரூ.84,990 மற்றும் பிளஸ் வேரியண்ட்டின் சலுகை விலை ரூ.99,990 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறுகிய கால சலுகை என மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளதே தவிர்த்து, எந்த தேதி வரையில் இந்த சலுகை விலை இருக்கும் என்பது குறித்த விபரங்கள் வெளியிடப்படவில்லை. ஆதலால், முடிந்தவரையில் விரைவாக புதிய ஹீரோ விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவது நல்லது. BaaS இல்லாமல், வழக்கம்போல் பேட்டரி உடன் வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை குறைவான விலையில் வாங்கவும் ஹீரோ மோட்டோகார்ப் வழிவகை செய்துள்ளது.


Click it and Unblock the Notifications









