1 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க! ரோட்டுல பார்க்கவே முடியலயே

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டான விடா பிராண்டில் இது வரை 1 லட்சம் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி புதிய மல் கல்லை எட்டியுள்ளது. இந்த சாதனை கடந்த 4ம் தேதி நடந்தது. இதன் மூலம் இந்நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் 6 சதவீத மார்கெட் பங்கை வைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரிக்கும் திட்டத்தில் இறங்கிவிட்டனர். ஓலா, டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்கள் இதில் வெற்றியும் பெற்றுள்ளன. இந்நிலையில் ஹீரோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பை செய்ய விடா என்ற பிராண்டை கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தியது.

Hero Vida Sales

இந்த பிராண்ட் அறிமுகமாகி 34 மாதம் தான் ஆகும் நிலையில் தற்போது 1 லட்சம் ஸ்கூட்டர்கள் என்ற மைல் கல்லை கடந்துள்ளது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆரம்பம் முதல் ஆகஸ்ட் 4ம் தேதி வரை 1.2 லட்சம் ஸ்கூட்டர்கள் வாகன் தளம் மூலம் விற்பனையாகியுள்ளது.

இந்நிறுவனம் சிறந்த விற்பனை கடந்த ஜூலை மாதம் தான் இருந்தது. மொத்தம் 10,504 வாகனங்களை வறி்பனவை செய்துள்ளது. இது மட்டுமல்ல இந்த வளர்ச்சியில் சென்றால் இந்த 2025ம் ஆண்டு மட்டுமே 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்களை இந்நிறுவனம் விற்பனை செய்துவிடும் என தெரிகிறது. இந்நிறுவனம் கடந்த ஜூலை மாத விற்பனையை கடந்தாண்டு ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 107 மடங்கு விற்பனை அதிகமாகியுள்ளது.

Hero Vida Sales

இதற்கு முன்னர் கடந்த மார்ச் மாதம் 8040 ஸ்கூட்டர்கள் விற்பனையானது தான் மிகபெரிய விற்பனையாக இருந்த நிலையில் தற்போது விற்பனை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ஒட்டு மொத்தமாக விற்பனையான எலெக்ட்ரிக் டூவீலர்களில் மொத்தம் 10 சதவீத மார்கெட் பங்கை இந்நிறுவனம் படித்துள்ளது. மொத்தமாக 1,02,865 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விடா பிராண்டில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்நிறுவனம் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை களம் இறக்குகிறது. விடா விஎக்ஸ்2 என்ற பெயரில் இந்த ஸ்கூட்டர் களம் இறங்குகிறது. இதில் விடா விஎக்ஸ் 2 ஸ்கூட்டர் ரூ44,990 என்ற விலையிலும், விஎக்ஸ் 2 பிளஸ் ஸ்கூட்டர் ரூ57,990 என்ற விலையிலும் விற்பனவையாகி வருகிறது. இந்த ஸ்கூட்டர் பேட்டரியை சர்வீஸ் முறையில் வழங்கும் ஸ்கூட்டர்களாக விற்பனைக்கு வருகின்றன.

Hero Vida Sales

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது விற்பனை மற்றும் சர்வீஸ் மையங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதே விடா ஸ்கூட்டர்கள் 4500 இடங்களில் விற்பனை செய்யப்படுகுிறது. இது போக விடா பிராண்ட் ஸ்கூட்டர்களை ஏத்தர் நிறுவனத்தின் ஏத்தர் எனர்ஜி மையங்களிலும் சார்ஜ் போடும் வகையில் உருவாக்கியுள்ளது. அங்கேயே சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரித்து வரும் நிலையில் தற்போது விடா பிராண்ட் பிரபலமாகி வருகிறது. இந்த பிராண்டில் வாகனங்கள் எதிர்காலத்திலும் சிறப்பாக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, August 5, 2025, 18:00 [IST]
English summary
Hero vida sales cross 1 lakh milestone india
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X