ஓலா ஸ்கூட்டர் கம்பெனிக்கு என்னதான் ஆச்சு? ஒரே வருடத்தில் நிலைமை மொத்தமா மாறி போச்சு!

2025 நவம்பர் மாத எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சில்லறை விற்பனைப் பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் (FADA) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் சற்று தாமதமாகவே எலெக்ட்ரிக் 2-வீலர் மார்க்கெட்டில் நுழைந்தது. இந்த மார்க்கெட்டிற்காக விடா (VIDA) என தனியாக ஒரு நிறுவனத்தை ஹீரோ துவங்கியது. ஹீரோவின் விடா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனப் பிரிவு, கடந்த ஆண்டு நவம்பர் உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நவம்பரில் விற்பனையில் 66.12% வளர்ச்சி கண்டுள்ளது.

hero vida surpassed ola electric

2025 நவம்பரில் மொத்தம் 12,213 எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை ஹீரோ விடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 7,352 விடா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், 2025 அக்டோபர் உடன் ஒப்பிடும்போது ஹீரோவின் விற்பனை 23.44% சரிவைச் சந்தித்துள்ளது.

அக்டோபரில் விற்பனையான எண்ணிக்கையை விட 3,739 விடா எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் குறைவாக நவம்பரில் விற்பனையாகியுள்ளன. ஹீரோ விடா பிராண்டின் கீழ் விஎக்ஸ்2 (VX2) மற்றும் வி2 (V2) வரிசையில் மொத்தம் நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், விஎக்ஸ்2 கோ (Go) இ-ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.73,850 முதல் வி2 புரோ (Pro) இ-ஸ்கூட்டரின் விலை ரூ.1,40,000 வரை (இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது.

மறுப்புறம், ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 2025 நவம்பரில் ஓலா மொத்தம் 8,402 எலெக்ட்ரிக் 2-வீலர்களை மட்டுமே ஓலா சில்லறை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனையான எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், ஓலா 20,920 யூனிட்கள் குறைவாக விற்று, 71.35% சரிவைச் சந்தித்துள்ளது.

hero vida surpassed ola electric

ஏனெனில், 2024 நவம்பரில் 29,204 எலெக்ட்ரிக் 2-வீலர்களை ஓலா விற்பனை செய்திருந்தது. அதேபோல், 2025 அக்டோபரில் விற்பனையான 16,036 யூனிட்களுடன் ஒப்பிடுகையிலும் இது 47.61% சரிவாகும். 2025-26ஆம் நிதியாண்டு துவங்கிய கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஓலாவின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஓலா தற்போது எஸ்1 எக்ஸ் (S1 X) (ரூ.84,999) முதல் எஸ்1 எக்ஸ்+ (ரூ.1,54,999) வரை நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்கிறது (அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்). மேலும், ஓலாவின் ரோட்ஸ்டர் (Roadster) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வரிசையில் இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகள் தற்போது முன்பதிவு செய்யக் கிடைக்கின்றன. இதில், ரோட்ஸ்டர் எக்ஸ் பைக்கின் ஆரம்ப விலை ரூ.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் தாமதமாக நுழைந்தாலும், ஹீரோ மோட்டோகார்ப் விரைவாகவே அதன் ஆதிக்கத்தை தொடர ஆரம்பித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு வரையில் எலெக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் முதலிடம் பிடித்துவந்த ஓலாவை குறுகிய காலத்தில் ஹீரோ விடா முந்தி இருப்பது ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. அதிகரித்து வரும் போட்டி காரணமாக ஓலாவின் ஒட்டுமொத்த விற்பனை செயல்திறன் பலவீனமடைந்து வருவதாக அறியப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 9, 2025, 21:46 [IST]
English summary
Hero vida surpassed ola electric in 2025 november electric two wheeler sales as per fada
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+