தரைமட்ட விலையில் விற்பனைக்கு வரப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! பேட்டரிக்கு காசு கிடையாது!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிராண்டான விடா பிராண்டில் இருந்து வரும் ஜூலை 1ம் தேதி விஎக்ஸ்2 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான டீசர் எல்லாம் வெளியான நிலையில் இந்த ஸ்கூட்டரை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற திட்டத்தில் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மாற்றம் பெற்றதை உணர்ந்து விடா என்ற பிராண்டை உருவாக்கி சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் விடா இசட் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வந்த நிலையில் இந்த ஸ்கூட்டரின் குறைந்த விலை வெர்ஷனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Hero Vida VX2 BaaS

அதன்படி ஹீரோ விடா இசட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போன்ற வடிவமைப்பிலேயே குறைந்த விலையில் ஹீரோ விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் ஜூலை மாதம் 1ம் தேதி விற்பனைக்கு களம் இறக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்த டீசர்கள் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் முறையில் இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும் என தெரிவித்துள்ளது.

தற்போது ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி நிறுவனம் எப்படி எம்ஜி விண்ட்ஸர் இவி காரை விற்பனை செய்கிறதோ அதன்படியே தனது ஹீரோ நிறுவனம் விடா விஎக்ஸ் 2 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் முதலில் குறைந்த செலவில் இந்த வாகனத்தை வாங்க முடியும். அதன் பின்னர் அவர்கள் பயன்படுத்த பயன்படுத்த அதற்கான கட்டணத்தை செலுத்தினால் போதும். இது வாடிக்கையாளர்களுக்கு பேட்டரி மீதான பயத்தை போக்குகிறது.

Hero Vida VX2 BaaS

இது மட்டுமல்ல மற்றொரு ஆப்ஷனில் வாகனத்தின் பேட்டரிக்கு தனியாகவும், வாகனத்திற்கு தனியாகவும் ஃபைனான்ஸ் ஆப்ஷன் முறையிலும் வாகனத்தை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. அதன் படி வாகனத்தின் பேட்டரிக்கு மட்டும் இஎம்ஐ செலுத்தும்படியாகவும், அல்லது வாகனத்திற்கு மட்டும் இஎம்ஐ செலுத்தும் ஆப்ஷனிலும் இ்நத வாகனத்தை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்கள் வழக்கம் போது பேட்டரியையும் சேர்த்து சொந்தமாக வாங்கும் ஆப்ஷனும் வழங்கப்படும் என தெரிகிறது.

ஹீரோ விடா விஎக்ஸ்2 வாகனத்தில் ஏராளமான அம்சங்கள் உட்புகுத்தப்படவுள்ளன. ஏற்கனவே இந்த விடா வாகனத்தில் 3 விதமான வேரியன்ட்கள் உள்ளன. லைட், பிளஸ், மற்றும் ப்ரோ ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. அதில் லைட் வேரியன்டில் 2.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 94 கி.மீ ரேஞ்சை தரும் அதிகபட்சமாக 69 கி.மீ வேகத்தில் பயணிக்கும். எக்கோ மற்றும் ரைடு ஆகிய மோடுகள் உள்ளன.

மிட் வேரியன்டான பிளஸ் வேரியன்டில் 3.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் உள்ளது. இது 143 கி.மீ ரேஞ்சை வழங்கும். அதிகபட்சம் 85 கி.மீ வேகத்தில் பயணிக்கும் சிட்டி எக்கோ ஸ்போர்ட் ஆகிய ரைடு மோடுகள் இருக்கும். டாப் வேரியன்டான ப்ரோ வேரியன்டில் 3.9 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் இருக்கும். இது 165 கி.மீ ரேஞ்சையும், அதிகபட்சம் 90 கி.மீ வேகத்தில் பயணிக்கும் திறனையும் கொண்டிருக்கும். இதே ஆப்ஷன்கள் இந்த விடா விஎக்ஸ் 2 ஸ்கூட்டரிலும் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனம் விற்பனையில் இருக்கும் சிக்கல் அதன் விலை மற்றும் பேட்டரி மீதான நம்பிக்கை இந்த இரண்டையும் தீர்த்து வைக்கும் வகையில் இந்த பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 18, 2025, 22:05 [IST]
English summary
Hero vida vx2 baas model launched battery as a service option
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+