ஹீரோ கம்பெனியில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்னாலே தரமா இருக்கும்! பஜாஜ், TVS எல்லாம் ஓரம் ஒதுங்க வேண்டியதுதான்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஆனால், எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்வதில் நேரடியாக இறங்காமல், 'விடா' (Vida) என்கிற துணை நிறுவனத்தின் மூலமாக செயல்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன் மார்க்கெட்டில் நுழைந்த ஹீரோ விடா பிராண்டில் வி2 (V2) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஏற்கனவே விற்பனையில் உள்ளது. இந்த நிலையில், வி.எக்ஸ்2 (VX2) என்கிற பெயரில் புதியதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விடா நிறுவனம் மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய உள்ளது. இன்று (ஜூலை 1) மாலை 6 மணியளவில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

கடந்த ஆண்டு இறுதியில் இத்தாலி நாட்டில் நடைபெற்ற EICMA 2024 கண்காட்சியில் விடா சார்பில் விடா இசட் (Z) என்கிற கான்செப்ட் வாகனம் காட்சிப் படுத்தப்பட்டது. அதாவது, இந்த இசட் கான்செப்ட்டின் அடிப்படையில் தான் தங்களது அடுத்தக்கட்ட எலக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும் என்பதை ஹீரோ விடா நிறுவனம் தெரிவித்து இருந்தது.

hero vida vx2 electric scooter

அதன்பின், இந்த ஆண்டு துவக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த விடா இசட் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான், வி.எக்ஸ்2 ஆகும். இருப்பினும், அச்சு அசலாக விடா இசட் கான்செப்ட்டை போல் இல்லாமல், சில மாறுபாடுகளை கொண்டதாக வி.எக்ஸ்2 இருக்கும்.

ஏற்கனவே விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இருப்பதால், அதனை காட்டிலும் வேறுப்பட்ட தோற்றத்தில் புதிய விஎக்ஸ்2 ஸ்கூட்டர் இருக்கும் என்பது உறுதி. புதிய விடா வி.எக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்பான சில டீசர்களை ஹீரோ ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. கோ (Go) மற்றும் பிளஸ் (Plus) என இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வேரியண்ட்டிற்கு ஏற்ப பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

hero vida vx2 electric scooter

பிளஸ் வேரியண்ட்டில் சற்று பெரியதான பேட்டரி பொருத்தப்படலாம். விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே, புதிய விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் நீக்கக்கூடிய பேட்டரி வழங்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இதைவிட முக்கியமாக, பேட்டரியை குத்தகை விடும் முறையை விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலமாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் ஆரம்பிக்கலாம்.

அதாவது, சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து, சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை கட்டணத்துடன் பெற்றுக் கொள்ளும் வசதி கடந்த சில மாதங்களாக பரவலாக அனைத்து எலக்ட்ரிக் வாகனங்களிலும் கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கிறது. சுருக்கமாக BaaS (Battery as a Service) என அழைக்கப்படும் இந்த வசதி இந்திய சந்தையில் வெற்றி பெற்றுள்ளதால் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் அறிமுகம் செய்யப்படலாம்.

ஸ்கூட்டருக்கான பேட்டரியை சுழற்சி முறையில் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி வரும். இதன் விளைவாக ஸ்கூட்டரின் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், தற்சமயம் வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்படும் அதே 3.7kWh மற்றும் 2.2kWh பேட்டரி ஆப்ஷன்களில் தான் புதிய விஎக்ஸ்2 ஸ்கூட்டரும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கிறோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம் விற்பனையில் இருக்கும் விடா வி2 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் குறைந்த விலையில் விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கிறோம். பேட்டரியும் BaaS முறையில் வழங்கப்பட்டால், ஸ்கூட்டரின் விலை இன்னும் குறைவாக நிர்ணயிக்கப்படும். இது, விடா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையை பெரிய அளவில் அதிகரிக்கும். ஆனால், BaaS முறையை ஹீரோ கையில் எடுக்க உள்ளதா என்பதுதான் கேள்வியே.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 1, 2025, 5:00 [IST]
English summary
Hero vida vx2 electric scooter launch today july 1 check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+