இந்த ஸ்கூட்டர்ல போனா ஊரே உங்களதான் பாக்கும்! காட்டெரும கணக்கா இருக்கு! விலை எவ்ளோனு தெரியுமா?
இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு (Maxi Scooters) என தனி வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. அவர்களை குறி வைத்து, களமிறக்கப்பட்ட ஒரு மேக்ஸி ரக ஸ்கூட்டர்தான், ஹீரோ ஷூம் 160 (Hero Xoom 160). கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ ஷூம் 160 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அத்துடன் ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டர்களை டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி கொண்டே வந்தன. இதன் காரணமாக முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

இந்த சூழலில், ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து கூடிய விரைவில் டெலிவரி பணிகளும் தொடங்கப்படவுள்ளது. அனேகமாக வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டரில், 156 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் (Engine) பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 14.6 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த ஸ்கூட்டரில் அதிநவீன வசதிகளுக்கும் (Features) பஞ்சம் இல்லை. வசதிகளை பொறுத்தவரையில், ஸ்மார்ட் கீ மிகவும் முக்கியமானதாகும். இதன் மூலமாக ரிமோட் முறையில் இருக்கையை திறப்பது போன்றவற்றை செய்து கொள்ள முடியும். அத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற வசதிகளையும் ஹீரோ ஷூம் 160 கொண்டுள்ளது.
சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டரின் விலை 1.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
இந்த ஸ்கூட்டரில் ட்யூயல் ஹெட்லேம்ப்கள், உயரமான வைசர், அகலமான ஹேண்டில்பார் மற்றும் சிங்கிள் பீஸ் சீட் போன்ற அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தற்போது முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால், ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டருக்காக காத்து கொண்டிருந்த இந்திய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மேக்ஸி ரக ஸ்கூட்டர்களில் ஏராளமான சிறப்பம்சங்கள் இருக்கும். அவை சௌகரியம், செயல்திறன் மற்றும் நடைமுறை பயன்பாடு ஆகியவற்றின் கலவை ஆகும். பொதுவாக வழக்கமான ஸ்கூட்டர்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்வது கடினம். அவை நகர பகுதிகளில் பயன்படுத்துவதற்கு மட்டுமே ஏற்றதாக இருக்கும்.
ஆனால் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை, நகர பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, தொலை தூர பயணங்களுக்கும் பயன்படுத்தலாம். அதற்கு ஏற்ற வகையில், அதாவது ரிலாக்ஸான பயண அனுபவத்தை வழங்கும் வகையில் அவை டிசைன் செய்யப்பட்டிருக்கும். எனவே நகர பயன்பாட்டுடன் சேர்த்து, தொலை தூர பயணங்களுக்கும் ஏற்ற வகையில் ஒரு ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள் ஹீரோ ஷூம் 160 ஸ்கூட்டரை பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications








