ஸ்கூட்டரா இது! பாக்க ராயல் என்பீல்டு பைக் மாதிரி முரட்டுத்தனமா இருக்கு! யமஹாவிற்கு ஆப்பு வைக்க போகும் ஹீரோ!

இந்திய சந்தையில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களுக்கு (Maxi Scooters) என தனி வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. எனவே பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்தியாவில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனமும் ஒன்றாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஷூம் 160 (Hero Xoom 160) என்ற மேக்ஸி ரக ஸ்கூட்டரை, நடப்பு 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற, ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் ஜூலை மாதம்தான் தொடங்கப்பட்டன.

Hero Xoom 160

ஆனால் இன்னமும் கூட, ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி (Delivery) பணிகள் தொடங்கப்படவில்லை. எனினும் இந்திய சந்தையில் ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும்? என்ற கேள்விக்கு தற்போது நமக்கு அதிகாரப்பூர்வமான பதில் கிடைத்துள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் நடப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தரப்பில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஸ்கூட்டருக்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Hero Xoom 160 Seat

ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரில், 156 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 14.6 பிஹெச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டர், 14 இன்ச் அலாய் வீல்களையும் கொண்டுள்ளது. இதன் உடன் ட்யூயல் பர்பஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் ட்ரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் ஏபிஎஸ் பிரேக் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், ஸ்மார்ட் கீ மற்றும் ட்யூயல் ஹெட்லேம்ப்கள் போன்ற வசதிகளும் (Features), ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் ஆரம்ப விலை 1.49 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இந்திய சந்தையில் யமஹா ஏரோக்ஸ் 155 (Yamaha Aerox 155) மேக்ஸி ஸ்கூட்டருக்கு நேரடி போட்டியாக ஹீரோ ஷூம் 160 இருக்கும்.

அத்துடன் இன்று (செப்டம்பர் 4) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள டிவிஎஸ் என்டார்க் 150 (TVS Ntorq 150) ஸ்கூட்டரும் கூட, ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரின் போட்டி மாடல்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். மேட் ரெயின்ஃபாரஸ்ட் க்ரீன், கேன்யான் ரெட், சம்மிட் ஒயிட் மற்றும் மேட் வல்கானிக் க்ரே உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் (Colour Options), ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டர் கிடைக்கும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வழக்கமான ஸ்கூட்டர்களை காட்டிலும், மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் சௌகரியமான பயண அனுபவத்தை வழங்கும். அத்துடன் அவை சக்தி வாய்ந்த இன்ஜினையும் கொண்டிருக்கும். இந்த அம்சங்கள் எல்லாம் வேண்டும் என நினைக்க கூடிய வாடிக்கையாளர்கள், ஹீரோ ஷூம் 160 மேக்ஸி ஸ்கூட்டரை வாங்கலாம் என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.

More from DriveSpark

Article Published On: Thursday, September 4, 2025, 13:48 [IST]
English summary
Hero xoom 160 official delivery timeline out check all details here
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+