வெளிநாட்டு ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் நம் நாட்டு ஹீரோ ஸ்கூட்டர் - பைக்குக்கு பதிலாக வாங்கலாம்
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp)-இல் இருந்து சமீபத்தில்தான் 'ஸூம் 160' (Xoom 160) என்கிற பெயரில் புதிய மேக்ஸி-ரக ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக ஏப்ரிலியா (Aprilia) நிறுவனத்தின் எஸ்.எக்ஸ்.ஆர்160 (SXR160) ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.
தோற்றம்: இவை இரண்டுமே மேக்ஸி-ரக ஸ்கூட்டர்கள் தான். இரண்டிலும் ஹேண்டில்பார் நன்கு உயரமாக வழங்கப்படுகிறது. ஸூம் 160 ஸ்கூட்டரில் கொஞ்சம் அதிக உயரத்தில். நீளமான காற்று தடுப்பு கண்ணாடியை கொண்டுள்ள இந்த இரு மேக்ஸி-ஸ்கூட்டர்களிலும் இருக்கை ஆனது பாதியாக பிளவுப்பட்டதாக வழங்கப்படுவதில்லை. இருப்பினும் ரைடிங் பொசிஷன் இரண்டிலும் வெவ்வேறானது.

என்ஜின் & சஸ்பென்ஷன்: ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டரில் 156சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. பெட்ரோல் டேங்க் 7 லிட்டர் கொள்ளளவில் வழங்கப்படுகிறது. இந்த ஹீரோ ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.
ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்160 ஸ்கூட்டரில் 160.03சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த ஸ்கூட்டரிலும் பெட்ரோல் டேங்க் 7 லிட்டர் கொள்ளளவு தான். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் சிங்கிள் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்படுகின்றன.
வசதிகள்: ஸூம் 160 ஸ்கூட்டரில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி உடன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ட்யூயல்-எல்இடி ஹெட்லைட்கள் & டெயில்லைட், சாவியில்லா ஸ்டார்ட், யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டியை பெறுவதோடு, போனுக்கு வரும் கால்ஸ்/மெசெஜஸை கண்ட்ரோல் செய்யலாம்.

எஸ்.எக்ஸ்.ஆர்160 ஸ்கூட்டரிலும் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை வழங்கப்படுகிறது. ஆனால், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி இல்லை. ஸ்கூட்டரை சுற்றியுள்ள விளக்குகள் யாவும் எல்இடி தான். இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டரில் ஹெட்லைட்டிற்கு அருகே எல்இடி டிஆர்எல்-கள் வழங்கப்படுகின்றன. பழைய ஸ்கூட்டர்களை போன்று சாவி போட்டால்தான் ஸ்டார்ட் ஆகக்கூடிய வசதியை கொண்டுள்ளது.
விலை: ரூ.1,48,500இல் புதிய ஹீரோ ஸூம் 160 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஏப்ரிலியா எஸ்.எக்ஸ்.ஆர்160 ஆனது ரூ.1,43,018 என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இரண்டிற்கும் பெரியதாக வித்தியாசம் இல்லை. இவை இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஸ்கூட்டர்களின் ஆன்-ரோடு விலைகள் இன்னும் அதிகமாக வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சவுகரியமான மற்றும் கொஞ்சம் வேகமான பயணத்திற்காக இவ்வாறான மேக்ஸி-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப் படுகின்றன. இன்னும் சில மேக்ஸ்-ரக ஸ்கூட்டர்களும் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் உள்ளன. அவற்றுள் லேட்டஸ்ட்டாக அறிமுகமான இரு ஸ்கூட்டர்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








