ஊரே ஆச்சிரியப்பட ஹீரோ அறிமுகம் செய்துள்ள பைக்... விலை அறிவிச்சாச்சு! வாங்க ரெடியா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்ச்சியில் எதிர்பார்த்ததை போல் எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) பைக் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 ஆனது ஓர் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக் ஆகும். புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப்பில் இருந்து எக்ஸ்பல்ஸ் பைக்குகளுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே அவ்வப்போது புது, புது எக்ஸ்பல்ஸ் பைக்குகள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது எக்ஸ்பல்ஸ் 210 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

hero xpulse 210 launched

இதுவரையில் 199சிசி என்ஜின் உடன் எக்ஸ்பல்ஸ் பைக் விற்பனை விற்பனை செய்யப்பட்டுவந்த நிலையில், இனி 210சிசி என்ஜின் உடன் கிடைக்கும். என்ஜின் அளவு பெரியதாக்கப்பட்டு இருப்பதற்கு ஏற்ப பைக்கின் விலையும் சற்று அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.76 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இது எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை காட்டிலும் ரூ.24,000 அதிகமாகும். எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை போல், எக்ஸ்பல்ஸ் 210 பைக்கும் ட்யூயல்-ஸ்போர்ட் மோட்டார்சைக்கிள் ஆகும். வட்ட வடிவில் எல்இடி ஹெட்லைட்டை கொண்டுள்ள இந்த புதிய பைக்கில் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள், ட்யூப்லர் ஹேண்டில்பார் மற்றும் சிங்கிள்-பீஸ் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

hero xpulse 210 launched

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 210சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, 4-வால்வு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 24.6 பிஎச்பி மற்றும் 20.7 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு வந்த நிலையில், இந்த பைக்கில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் கியர் ஆனது நெடுஞ்சாலைகளில் அதிவேக பயணங்களுக்கு ஏற்றதாக இருக்கும். புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் ஃபுல்-எல்இடி ஹெட்லைட், 4.2 இன்ச் டிஎஃப்டி கன்சோல் மற்றும் ஸ்மார்ட்போன் கனெக்ட்டிவிட்டி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பாருக்கு மத்தியில் வழங்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமெண்ட் திரை மூலமாக ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர், டச்சோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

hero xpulse 210 launched

இவ்வாறான அட்வென்ச்சர் பைக்குகளுக்கு சஸ்பென்ஷன் செட்-அப் தான் முக்கியமானது ஆகும். புதிய எக்ஸ்பல்ஸ் 210 பைக்கில் முன்பக்கத்தில் 210மிமீ டிராவல் உடன் நீளமான டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்பக்கத்தில் 205மிமீ டிராவல் உடன் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங் பணியை கவனிக்க, இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் உடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்பார்க்காத வெற்றியை எக்ஸ்பல்ஸ் 200 பைக் கொடுத்தது. அதேபோன்று, எக்ஸ்பல்ஸ் 210 பைக்கும் மார்க்கெட்டில் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கிறோம். இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ்210 பைக்கிற்கான முன்பதிவுகள் விரைவில் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 16:32 [IST]
English summary
Hero xpulse 210 launched at bharat mobility global expo 2025
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X