பைக்கை காராக மாற்றிய ஹீரோ! விலை இவ்ளோதானா! ஹோண்டா கம்பெனிகாரங்க ஷட்டரை மூடிட்டு கௌம்ப வேண்டியதுதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R). இது ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் ரகத்தை சேர்ந்த பைக் ஆகும். இந்த பைக்கின் புதிய வேரியண்ட் ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது சத்தமே இல்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இதுதான் இனிமேல் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் டாப் வேரிய்ண்ட்-ஆக இருக்கும். கார்களில் இருப்பதை போன்று தேவைப்படும் வேகத்தை 'செட்' செய்து கொண்டு, ஆக்ஸலரேட்டரையே பயன்படுத்தாமல், தொடர்ந்து அதே வேகத்தில் சீராக பயணம் செய்யும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி இந்த வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது.

Hero Xtreme 125R

அத்துடன் பவர், ரோடு மற்றும் ஈக்கோ என 3 ரைடிங் மோடுகளும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் இந்த புதிய டாப் வேரியண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் டிஸ்க் பிரேக்குகள் உடன், ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும், இந்த புதிய வேரியண்ட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்ட்டில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை கொண்டுள்ள முதல் பைக் இதுதான் என ஆட்டோகார் இந்தியா தளம் தெரிவித்துள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் மற்ற வேரியண்ட்களிடம் இருந்து, இந்த புதிய டாப் வேரியண்ட்டை தனித்து காட்டுவதற்காக, 3 புதிய கலர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அவை சிகப்பு, பச்சை மற்றும் க்ரே ஆகியவை ஆகும். இந்த 3 கலர்களும், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் வேறு வேரியண்ட்கள் எதிலும் கிடைக்காது. தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள டாப் வேரியண்ட்டில் மட்டுமே பிரத்யேகமாக கிடைக்கும்.

Hero Xtreme 125R Side View

செயல்திறனை பொறுத்தவரையில், இந்த புதிய டாப் வேரியண்ட்டில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 11.5 ஹெச்பி பவர் மற்றும் 10.5 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் இந்த புதிய வேரியண்ட்டின் விலை 1,04,500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும். இந்த விலைக்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இந்த புதிய வேரியண்ட் கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில், க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடுகள் போன்ற வசதிகள் உடன், ஹீரோ க்ளாமர் எக்ஸ் (Hero Glamour X) பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது அதே வசதிகள் உடன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் வருகை இந்திய சந்தையில் 125 சிசி செக்மெண்ட்டை சேர்ந்த மற்ற பைக்குகளான டிவிஎஸ் ரைடர் 125 (TVS Raider 125), ஹோண்டா சிபி 125 ஹார்னெட் (Honda CB 125 Hornet) மற்றும் பஜாஜ் பல்சர் என்125 (Bajaj Pulsar N125) ஆகிய பைக்குகளுக்கு விற்பனையில் நெருக்கடியை ஏற்படுத்தலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் கருதுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 8, 2025, 9:49 [IST]
English summary
Hero xtreme 125r launched with cruise control dual channel abs 3 riding modes check price and more
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+