இவ்வளவு கம்மி விலைக்கு இப்படி ஒரு வண்டியா! வீட்டுக்கு ஒன்னு வாங்கி போடலாம் போலயே!
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக்கின் சிங்கிள் சீட் வேரியன்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் ரூ1 லட்சத்திற்கும் குறைந்த விலையில் இந்த பைக் அறிமுகமாகியுள்ளது.இந்த பைக் ஸ்பிளிட் சீட் வேரியன்டை விட குறைவான விலையில் அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 125ஆர் என்ற பைக்கை விற்பனை செய்து வருகிறது. இதில் புதிய வேரன்டாக சிங்கிள் சீட்டர் வேரியன்டை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளுது. இந்த வேரியன்ட் ஸ்பிளிட் சீட்டர் வெர்ஷனை விட குறைவா விலையில் அறிமுகமாகியள்ளது. சிங்கிள் சீட்டர் வேரியன்ட் ரூ98,425 என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது.அதே போல ஸ்பிளிட் சீட்டர் வேரியன்ட் ரூ1.02 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இந்த இரண்டு விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலைகள் தான்.

இந்த பைக்கில் சிங்கிள் சீட் செட்டப் தவிற வேறு மாற்றங்கள் எதுவும் இல்லை. இந்த பைக்கில் 124.7 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.5 எச்பி பவரையம், 10.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உருவக்கப்பட்டுள்ளது. இது 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதே செட்டப் தான் ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கிலும் இருக்கிறது.
இந்த பைக்கில் புதிய அம்சங்கள் மற்றும் தொழிற்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக இதில் முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட், எல்இடி டர்ன் சிக்னல், அலாய் வீல்கள், ஷார்ப்பான பாடி பேனல்கள், 6 கலர் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி ஸ்டாலியன் பிளாக், ஃபயர்ஸ்டிரோம் ரெட், கோபால்ட் ப்ளூ, உள்ளிட்ட கலர்களும் உள்ளன.

இந்த எக்ஸ்ட்ரீம் 125 ஆர் பைக் டைமண்ட் கட் ஃபிரேம் சேஸிஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 37 மிமி டெலஸ்கோபிக் ஃபோர்க் உருவாக்கப்பட்டுள்ளது. இது முன்பக்கம் 37 மிமி டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்பக்கம் ஹைட்ராலிக் மோனோ ஷாக் சன்பென்சன் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் 90/90 -17 அளவு கொண்ட டியூப்லெஸ் டயர்களுடன் வருகிறது. முன்பக்கம் 120/80 அளவிலும், பின்பக்கம் 17 இன்ச் டியூப் லெஸ் டயரும் வளங்கப்பட்டுள்ளது.
இந்த பைக் மொத்தம் 136 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த பைக்கில் 1319 மிமீ வீல் பேஸ் மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் ஆகிய அம்சங்கள் உள்ளன. இந்த பைக் 794 மிமீ உயரத்தில் சீட் வைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 10 லிட்டர் அளவில் முழு டேங்க் வசதி இருக்கிறது. மேலும் இந்த பைக்கில் 240 மிமீ முன்பக்க டிஸ்க் பிரேக் மற்றும் பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக் செட்டப், கம்பைன் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

டாப் வேரியன்டில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் சிஸ்டம் இருக்கிறது. இந்நிறுவனம் இதே இன்ஜினை வைத்து கிளாமர் எக்ஸ் என்ற பைக்கை வெளியிறட்டுள்ளது. அந்த பைக்கில் செக்மெண்டிலேயே முதன் முறையாக உள்ள பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. முக்கியமாக அதில் ரைடு பை ஒயர் டெக்னாலஜி, எக்கோ, ரோடு, பவர் என 3 விதமான ரைடு மோடுகள், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், 5 விதமான கலர் ஆப்ஷன்கள், டிரம், டிஸ்க் பிரேக் வெர்ஷன்கள் விற்பனைக்கு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ1 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாகனங்கள் நல்ல விற்பனையை பெற்று வருகிறது. இந்த வகையில் இந்த பைக் ரூ1 லட்சத்திற்கு குறைவான விலையில் விற்பனவைக்க வந்துள்ளதால் விற்பனவை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









