திருக்காமலேயே தானா ஓடும் பைக்! விலை இவ்வளவு கம்மியா?
ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 160 என்ற பைக்கை அப்பேட் செய்து அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்குகள் ஏற்கனவே டீலர் ஷிப்களுக்கு வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ நிறுவனம் எக்ஸ்ட்ரீம் 160 என்ற பைக்கை இ்நதியா முழுவதும் விற்பனை செய்வ வருகிறது. இந்த பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனவ் குறித்த தகவல்கள் அந்நிறவனத்தின் வெப்சைட்டில் சமீபத்தில் வெற்றம் செய்யப்பட்டது. இந்த பைக்குககள் டீலர்ஷிப்களுக்கு வந்த புகைப்படங்களும் வெளியாகியிருந்தன. இந்நிலையில் ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ அறிமுகத்தை செய்துள்ளது.

ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி காம்பேட் எடிசன் என இதை அழைக்கிறது. இது ரெகுலர் மாடலை விட ரூ4500 கூடுதலா விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த பைக்கில் பல புதிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த 160 சிசி நேக்கட் பைக் செக்மெண்டில் பலத்த போட்டிகள் உள்ளன. டிவிஎஸ், பஜாஜ் ஆகிய நிறுவனஙங்கள் இதே செக்மெண்டில் பைக்குகளை விற்பனை செய்து வரும் நிலையில் ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கை அப்டேட் செய்துள்ளது.
இந்த பைக்கில் முக்கியமாக க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ரைடு பை வயர் திராட்டல் சிஸஅடம் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் ரூ1.34 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதுவே ரெகுலர் மாடல் ரூ1.30 என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது.

இந்த பைக்கில் முக்கியமான மாற்றம் முன்பக்கம் தான் செய்யப்பட்டுள்ளது. அப்டேட் செய்யப்பட்ட பைக்கில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட எல்இடி ஹெட்லைட்,புதிய 4.2 இன்ச் எல்சிடி கலர்டு இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியன உள்ளன. மேலும் இந்த பைக்கின் கிராஃபிக்ஸ் மற்றும் பெயிண்டிங் விஷயங்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது.
இந்த பைக்கில் ரைடு பை ஒயர் சிஸ்டம் இருக்கிறது. இதில் ரெய்ன், ரோடு, மற்றும் ஸ்போர்ட் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் இதில் க்ரூஸ் கண்ட்ரோல் ஆப்ஷனும் உள்ளது. இது 160 சிசி செக்மெண்ட் பைக்கில் முதன் முறையாக வரும் அம்சம் ஆகும். ஏற்கனவே ஹீரோ நிறுவனம் இந்த அம்சத்தை தனது எகஸ்ட்ரீம் 125 ஆர் மற்றும் கிளாமர் எக்ஸ் ஆகிய வாகனங்களில் வைத்துள்ளது. மேலும் இதற்காக ஸ்விட்ச் கியர்களில் சில மாற்றங்களையும் செய்துள்ளது.இதனால் வாகனம் ரன்னிங்கில் இருகு்கும் போதே மோடு மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல்களை கண்ட்ரோல் செய்ய முடியும்.

இதில் உள்ள க்ரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம் எந்த விதமான இன்புட்டும் இல்லாமல் ஒரே வேகத்தில் வாகனத்தை பயணிக்க வைக்க அனுமதிக்கிறது. இதனால் நீண்ட தூரம் பயணிக்கும் போது ஓட்டுநர் டயர்ட் ஆகாமல் வாகனத்தை இயக்க முடியும். இந்தபைக்கில் உள்ள இன்ஜினை பொருத்தவரை 163.2 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது 4 வால்வு இன்ஜினாக உள்ளது. இது 16.6 பிஎச்பி பவரையும், 14.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்சன் செட்டப்பை பொருத்தவரை கேஒய்பி யூஎஸ்டி ஃபோர்க் சஸ்பென்சன் சிஸ்டத்தை பயன்படுத்துககிறது. பின்பக்கம் மோனாஷாக் சஸ்பென்சன் சிஸ்டம் இருக்கிறது. மேலும் இது டுயல் சேனல் ஏபிஎஸ், சிஸ்டத்துடன் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் செட்டப் உட்ன இருகு்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதன்படி பிரான்ஸ்/பிளாக், ஃபாரஸ்ட் கிரீன்/ நியான் கிரீன், பிளாக்/ ரெட், மேட் கிரே ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதில் மேட் கிரே காம்பேட் எடிசனில் மட்டுமே கிடைக்கும் கலர் ஆப்ஷன் ஆகும்.


Click it and Unblock the Notifications









