எல்லா நாடும் இவங்க கையிலதான் போலையே! உள்நாடு-வெளிநாடு ரெண்டுலேயும் விற்பனையில் பட்டைய கிளப்பிட்டு இருக்கு..
உலக நாடுகள் அனைத்தும் இந்த நிறுவனத்தின் கையிலதான் என கூறலாம்போல, அந்த அளவிற்கே விற்பனையில் அசத்தோ அசத்து என அசத்திக் கொண்டிருக்கின்றது ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (HMSI) உற்பத்தி நிறுவனம். இந்த நிறுவனம் கடந்த 2025 மார்ச் மாதத்தில் மட்டும் 4,01,411 யூனிட்டுகள் டூ-வீலர்களை விற்பனைச் செய்திருக்கின்றது. இது முந்தைய பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். 2025 பிப்ரவரி மாதத்தில் 3,83,918 யூனிட்டுகள் வரை மட்டுமே ஹோண்டா டூ-வீலர்கள் விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது.
மேலே பார்த்தது ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் மட்டுமே விற்பனைச் செய்த வாகனங்களின் எண்ணிக்கை ஆகும். ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களையும் இதில் சேர்த்தால் நிறுவனத்தின் மொத்த விற்பனை 4,27,448 யூனிட்டுகளாக உள்ளன. இதேபோல், ஹோண்டா நிறுவனம் சென்ற 2024-25 நிதியாண்டிலும் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியையேப் பெற்றிருக்கின்றது.

அதன் டூ-வீலர்கள் 58 லட்சத்து 31 ஆயிரத்து 104 யூனிட்டுகள் வரையே 2024-25 ஆம் நிதியாண்டில் விற்பனையாகி இருக்கின்றன. இது 2023-24 நிதியாண்டைக் காட்டிலும் 19 சதவீதம் அதிக விற்பனை எண்ணிக்கை என்பது கவனிக்கத்தகுந்தது. அதேநேரத்தில் இந்த மொத்த எண்ணிக்கையும் இந்தியாவில் மட்டுமே விற்பனையானவை அல்ல.
வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும். ஆனால், இதில் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பது உள்நாட்டில் விற்பனையானவையே ஆகும். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால், மொத்த விற்பனையில் 53 லட்சத்து 26 ஆயிரத்து 092 யூனிட்டுகள் உள் நாட்டில் (இந்தியாவில்) விற்பனையாகியவை ஆகும்.
பாக்கி உள்ள 5,05,012 யூனிட்டுகளே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன. இதுவும் அவ்வளவு குறைவான எண்கள் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தகுதந்தது. இதன் வாயிலாக இந்தியாவை போலவே உலக நாடுகள் பலவற்றையும் ஹோண்டா நிறுவனம் தன் வசம் வளைத்துப் போட்டிருக்கின்றது என்பது துள்ளியமாக தெரிகின்றது.
இதேபோல், வரும் நாட்களிலும் இந்த நிறுவனம் இந்தியா மற்றும் உலக நாடுகளின் இரண்டு சக்கர வாகன பிரிவை மிகப் பெரிய ஆட்சிச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப அதன் செயல்பாடுகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் டூ-வீலர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் விதமாக அது சமீபத்தில் இரண்டு அசத்தலான மின்சார ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
ஆக்டிவா இ: (Activa e:) மற்றும் க்யூசி 1 (QC1) இந்த இரண்டு மின்சார ஸ்கூட்டர்களையே இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் பங்களிக்கும் விதமாக அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. ஆனால், நாட்டின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே இவை இப்போது விற்பனைக்கு வந்திருக்கின்றன.
விரைவில் நாடு முழுக்க அது விற்பனைக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆகையால், சென்னையிலும் விரைவில் இந்த வாகனங்களை விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். மேலும், ஹோண்டா நிறுவனம் இந்த இரண்டு மின்சார வாகன மாடல்களை மட்டுமின்றி இன்னும் வேறு சில புதுமுக இ வாகனங்களையும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆக்டிவா இ: மற்றும் க்யூசி 1 எலெக்ட்ரிக் டூ-வீலர்களின் வருகை ஓலா எலெக்ட்ரிக், ஏத்தர் எனெர்ஜி, டிவிஸ் மற்றும் பஜாஜ் ஆகிய நிறுவனங்களின் மின்சார வாகனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், இது இன்னும் நாடு முழுக்க விற்பனைக்கு வராதது பலருக்கு ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








