ஹோண்டாவுக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல.. கதறி அழாத குறைதான்.. அவ்ளோ வேதனையில இருக்கு!!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் (Honda Motorcycle and Scooter India) உற்பத்தி நிறுவனத்திற்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்க போல என கூறும் அளவிற்கு அது விற்பனையில் மாபெரும் வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது. நிறுவனத்தின் 2025 ஏப்ரல் மாத சேல்ஸ் ரிப்போர்ட் (விற்பனை விபரம்) இப்போது வெளியாகி இருக்கின்றது. இதில் வெளியாகி இருக்கும் தகவல்களின்படி ஹோண்டா நிறுவனம் சென்ற மாதத்தில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் 2024ஆம் ஆண்டு ஏப்ரலைக் காட்டிலும் 2025 ஏப்ரலில் சுமார் 11 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஹோண்டா இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் சந்தித்து இருக்கின்றது. நிறுவனத்தின் டூ-வீலர்கள் மொத்தமாகவே 4 லட்ச்து 80 ஆயிரத்து 896 யூனிட்டுகள் வரை மட்டுமே 2025 ஏப்ரலில் விற்பனையாகி இருக்கின்றன.

Hmsi sales decline in april 2024

அதேவேளையில், 2024 ஏப்ரலிலோ 5 லட்சத்து 41 ஆயிரத்து 946 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. இப்போதைய மாபெரும் விற்பனை வீழ்ச்சியால் ஹோண்டா நிறுவனம் மீளமுடியாத கவலையில் ஆழ்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீழ்ச்சிக்கு பின்னால் உள் நாடு மற்றும் வெளி நாடு என இரண்டிலும் வரவேற்புக் குறைந்ததே காரணமாக உள்ளது.

2024 ஏப்ரலில் உள் நாட்டில் மட்டும் 4,81,046 யூனிட்டுகள் ஹோண்டா டூ-வீலர்கள் விற்பனையாகியிருந்தன. இது சுமார் 12 சதவீதமாக குறைந்து போன ஏப்ரலில் 4,22,931 யூனிட்டுகளாக மாறியது. இதுவே 2024 ஏப்ரலில் இந்தியாவில் விற்பனையாகி ஹோண்டா இரண்டு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஆகும்.

Honda activa h smart pic

இதேபோல், 2024 ஏப்ரலில் 60,900 யூனிட்டுகளாக இருந்த ஏற்றுமதி, நடப்பாண்டு ஏப்ரலில் 57,965 யூனிட்டுகளாக குறைந்திருக்கின்றது. இதுபோன்று மக்கள் மத்தியில் தேவைக் குறைந்த காரணத்தினாலேயே நிறுவனத்தின் மொத்த விற்பனையில் மிகப் பெரிய வீழ்ச்சியை ஹோண்டா சந்தித்து இருக்கின்றது. இருப்பினும், நிறுவனம் விற்பனையை அதிகரிக்கச் செய்வதற்கான முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றது.

இதன் அடிப்படையிலேயே சமீபத்தில் ஓபிடி 2பி தர கட்டுப்பாடுகளுக்கு இணங்க தயாரிக்கப்பட்ட டியோ 125 (Dio 125), சிபி350 (CB350), சிபி350 ஹைனெஸ் (CB350 H'ness) மற்றும் சிபி350 ஆர்எஸ் (CB350RS) ஆகிய மாடல்களை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதேபோல், இன்னும் புதுமுக மாடல்களையும் அது நாட்டில் விரைவில் விற்பனைக்குக் களமிறக்க திட்டமிட்டு இருக்கின்றது.

ஆகையால், ஏப்ரலில் விட்டதை இந்த மே மாதத்தில் ஹோண்டா நிறுவனம் பிடித்துவிடும் என நம்பப்படுகின்றது. இதுமட்டுமல்ல, ஹோண்டா நிறுவனம் இப்போது குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் ஆக்டிவா இ மற்றும் க்யூசி1 ஆகிய இரண்டு மின்சார ஸ்கூட்டர் மாடல்களையும் நாடு தழுவிய அளவில் விற்பனைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டு இருக்கின்றது. இது நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை வகிக்கும் என நம்பப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னணி நிறுவனமான ஹோண்டாவிற்கு இந்த நிலை ஏற்பட்டு இருப்பது ஒட்டுமொத்த இந்திய வாகன உலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், 4 லட்ச்து 80 ஆயிரத்து 896 யூனிட்டுகள் விற்பனை என்பது அவ்வளவு சாதாரணமான விற்பனை எண்ணிக்கை இல்லை என்பதையும் நாம் இங்கே கவனத்தில் கொண்டே ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Saturday, May 3, 2025, 21:42 [IST]
English summary
Hmsi experiences 11 percent year on year sales decline to 480896 units in april 2024
மேலும்... #honda motorcycle #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+