சூட் கேஸ் வடிவில் இருக்கும் இது மின்சாரத்தில் ஓடுமா!.. ஹோண்டா ஸ்டாலில் நின்று கொண்டிருந்த அதிசயம்!

வாகனங்களுக்கான உலக மேடையாக 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) கருதப்படுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆட்டோ எக்ஸ்போ என்கிற பெயரில் நடைபெற்று வந்த இந்த வாகன கண்காட்சி முதல் முறையாக பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ என்கிற பெயரில் நடைபெற்றது.

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்திலேயே இந்த ஷோ நடைபெற்று வருகின்றது. இந்த வாகனங்களுக்கான கண்காட்சியில் வாகன உற்பத்தியாளர்கள் அனைவரும் வாகனங்களை மட்டும் காட்சிப்படுத்தியநிலையில் ஹோண்டா தனித்தவமாக தன்னுடைய சூட்-கேஸைக் காட்சிப்படுத்தி இருந்தது. இது வாகன ஆர்வலர்களின் கவனத்தை சற்றே கவரும் விதமாக அமைந்தது.

Hmsi motocompacto ev showcases

குறிப்பாக, வாகனங்களுக்கான மேடையில் என்ன இது சூட் கேஸ் என்றே பலரையும் முனுமுனுக்க செய்ததது. ஆனால், அது சூட்-கேஸ் அல்ல, அந்த வடிவமைப்பில் இருக்கக் கூடிய ஓர் மின்சார வாகனம் ஆகும். இதன் அடிப்படையிலேயே முன் மற்றும் பின் பக்கத்தில் என இரண்டு வீல்கள், ஹேண்டில் பார், ஹெட்லைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, சைடு ஸ்டாண்டும் வாகனத்தை நிறுத்த ஏதுவாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் மடித்து வைத்ததுக் கொள்ளும் வசதிக் கொண்ட வாகனம் ஆகும். அதாவது, இதன் ஹேண்டில் பாரை வெளியிலேயே தெரியாத வகையில் மடித்துக் கொள்கின்ற வசதியே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஆகையால், இதனை ஓர் சூட் கேஸை போலவே மடித்த பின்னர் ஓர் மூலையில் வைத்துக் கொள்ள முடியும். இதன் எடையும் மிகவும் குறைவானதாகவே இருக்கின்றது. அதேவேளையில், ஓர் முழு சார்ஜில் இந்த வாகனத்தில் அதிகபட்சம் 24 கிமீ துரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 19 கிமீ ஆகும். குறைவான இடைவெளியில் உள்ள பயணங்களுக்காக பயன்படும் வாகனமாகவே இது உலக சந்தையில் விற்பனையில் இருக்கின்றது. ஹோண்டா மோட்டோகாம்பேக்டோ என்கிற பெயரிலேயே இது விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் ஆகும்.

ஆகையால், விடியற்காலை எழுந்து சார்ஜ் போட்டுவிட்டால், ஆஃபீஸ் போகுவதற்குள் அது முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். ஆனால், ஒருவரால் மட்டுமே இந்த வாகனத்தில் பயணிக்க முடியும். ஆமாங்க, ஒரே ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்ற மாதிரியான இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றது. சைக்கிள்களில் வழங்கப்படுவதைப் போன்ற இருக்கையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ரைடரின் பாதுகாப்பான பயணத்திற்காக பின் பக்கத்தில் சிவப்பு லைட், முன் பக்கத்தில் பிரகாசமான ஹெட்லைட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், கால் வைக்கும் இடம், சிறிய ஸ்டோரேஜ், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், ஸ்மார்ட் போன் இணைப்பு மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்கிற விபரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த வாகனம் எப்போது வேண்டுமானாலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவிலும் இப்போதைய நிலவரப்படி மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஹோண்டா இந்த வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வருகின்றதோ இல்லையோ, இந்த நிறுவனத்தின் வசம் இந்தியாவிற்காக வேற சில பிளான்கள் இருக்கின்றன. அந்த வகையிலேயே சமீபத்தில் நிறுவனம் ஆக்டிவா இ: மற்றும் க்யூசி 1 ஆகிய மாடல்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, ஹோண்டா.

More from DriveSpark

Article Published On: Monday, January 20, 2025, 10:23 [IST]
English summary
Hmsi motocompacto showcases at bharat mobility global expo
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+