இந்த பைக்கை வைத்து இருப்பவங்க எல்லாரும் மீண்டும் ஷோரூமுக்கு கொண்டு வாங்க! ஹோண்டாவில் இருந்து வந்த அறிவிப்பு!

ஜப்பானின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) 2019ஆம் ஆண்டு முதல் 2025 வரை உற்பத்தி செய்த சி.ஆர்.எஃப்1100எல் ஆப்பிரிக்கா ட்வின் (CRFL 1100L Africa Twin) சாகச மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

மின் வயரிங் (Wiring) தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களைச் சரி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா உறுதிப்படுத்தியுள்ளது. இது உலக அளவில் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, உலகில் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்ட ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

honda 2-wheelers announced recall

அதன்படி, இந்தியாவிலும் திரும்ப அழைக்கப்படும் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிள்களில் இடது ஹேண்டில்பார் சுவிட்சுடன் இணைக்கப்பட்ட வயரிங் கனெக்‌ஷனில் தான் இந்த குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது. மோட்டார்சைக்கிளை இயக்கும்போது, இந்த வயரிங் தொடர்ந்து வளைவதாலும், நீள்வதாலும், அதன் இணைப்புப் பகுதியில் காலப்போக்கில் ஆக்சிஜனேற்றம் ஏற்படலாம்.

அதாவது, வயரிங்கிற்குள் காற்று நுழைகிறது. இந்த ஆக்சிஜனேற்றம் வயர்களின் மின்சார கடத்துத்திறனைக் குறைக்கும். இதனால் மோட்டார்சைக்கிளின் முக்கிய மின் பாகங்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். இந்த குறைபாட்டின் ஆரம்ப அறிகுறிகளாக ஹார்ன் வேலை செய்யாமல் போவது அல்லது ஹெட்லைட்டில் குறைந்த அல்லது அதிக பீம் வெளிச்சத்தை மாற்றுவதில் சிரமம் ஏற்படுவது போன்றவை ஏற்படும்.

இந்த பிரச்சனைகள் மோட்டார்சைக்கிள் பயன்படுத்தப்படும் சூழ்நிலைகள் மற்றும் முறைகளைப் பொறுத்து படிப்படியாக அதிகரிக்கலாம். பாதிக்கப்பட்ட மோட்டார்சைக்கிள்களுள் சிலவற்றில் இந்த குறைபாடுகள் இன்னமும் வெளிப்படாமல் இருக்கலாம். ஓட்டுனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட ஹேண்டில்பார் வயரிங் செட்-அப்பை ஹோண்டா இலவசமாக மாற்றித் தரும் என்று அறிவித்துள்ளது.

honda 2-wheelers announced recall

இந்த சேவை ஹோண்டாவின் பிக்விங் டாப்லைன் (BigWing Topline) டீலர்ஷிப் ஷோரூம்கள் மூலம் இந்தியா முழுவதும் வழங்கப்படும். மோட்டார்சைக்கிள் தற்போது ஹோண்டாவின் வாரண்டியின் கீழ் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை வருகிற 2026 ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் இருந்து தொடங்கும் என ஹோண்டா அறிவித்துள்ளது.

ஏனெனில், ஆப்பிரிக்கா ட்வின் பைக் தற்சமயம் இந்தியாவில் விற்பனையில் இல்லை. 2026ஆம் ஆண்டின் துவக்கத்தில் புதிய மேம்படுத்தப்பட்ட ஆப்பிரிக்கா ட்வின் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளுக்கு உரிமையாளர்களாக இருப்பவர்களை ஜனவரியில் இருந்து ஹோண்டா கவனிக்க உள்ளது. வாடிக்கையாளர்களை மின்னஞ்சல் குறுஞ்செய்திகள் அல்லது தொலைபேசி அழைப்புகள் மூலம் ஹோண்டா நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.

அப்போது, இவ்வாறான பழுது பார்ப்பு குறித்து ஆப்பிரிக்கா ட்வின் பைக்குகளின் உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பழுது பார்ப்பை மேற்கொள்வதற்கான நேரம் ஒதுக்கப்படும். பைக்கின் ஹேண்டில்பார் வயரிங்கில் கண்டறியப்பட்டுள்ள இந்த பிரச்சனையினால் ஏற்படும் அசௌகரியத்தை தவிர்க்க டீலர்ஷிப் அதிகாரிகள் தொடர்பு கொள்ளும் நேரத்தில் பைக் உரிமையாளர்கள் உடனடியாக இதற்கு பதிலளிக்குமாறு ஹோண்டா நிறுவனத்தால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

honda 2-wheelers announced recall

தங்களின் மோட்டார் சைக்கிள் இந்த திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் வருகிறதா என்பதை சரிபார்க்க வாடிக்கையாளர்களுக்காக ஒரு டிஜிட்டல் வசதியை ஹோண்டா கொண்டுள்ளது. ஹோண்டா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களின் ஆப்பிரிக்கா ட்வின் மோட்டார்சைக்கிளின் வாகன அடையாள எண்ணை (VIN) உள்ளிடுவதன் மூலம், இந்த பிரச்சனையில் தங்களது ஆப்பிரிக்கா ட்வின் பைக் உட்படுகிறதா என்பதை உரிமையாளர்கள் அறியலாம்.

சி.ஆர்.எஃப்1100எல் ஆப்பிரிக்கா ட்வின் என்பது இந்தியாவில் ஹோண்டாவின் விலையுயர்ந்த, முதன்மை அட்வென்ச்சர் (Adventure) ரக மோட்டார்சைக்கிள் ஆகும். இது ஆஃப்-ரோடு திறன் மற்றும் நீண்ட தூர பயணங்களை விரும்பும் ஓட்டுனர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திரும்பப் பெறும் நடவடிக்கை மூலம், பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் ஓட்டுனர் பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு நம்பகத்தன்மைக்கான தனது உறுதிப்பாட்டை ஹோண்டா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு, விளக்குகள் மற்றும் ஹார்ன் அமைப்புகள் சரியாகச் செயல்படுவது மிகவும் அவசியம் ஆகும். குறைபாடுள்ள ஹேண்டில்பார் வயரிங் செட்-அப்பை மாற்றுவதற்கான ஹோண்டாவின் இந்த முன்கூட்டிய நடவடிக்கை, ஆபத்துக்களைக் குறைத்து, ஆப்பிரிக்கா ட்வின் பைக் உரிமையாளர்கள் மத்தியில் நம்பிக்கையைத் தக்க வைக்கும் நிறுவனத்தின் நோக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Sunday, September 14, 2025, 5:00 [IST]
English summary
Honda 2 wheelers announced recall of crf1100l africa twin bikes in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X