4.65 லட்சம் குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறிய இந்த கம்பெனி வாகனங்கள்!
ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர் தற்போது மிகப்பெரிய அளவில் விற்பனையை பெற்றுள்ளது. இந்நிறுவனம் கடந்த மே மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. உள்ளூர் விற்பனையிலும் சரி ஏற்றுமதியிலும் சரி நல்ல விற்பனையை பெற்றுள்ளது. இந்த வகையில் இந்த நிறுவனம் கடந்த மே மாதம் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. எவ்வளவு வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா டூவீலர் நிறுவனம் இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் 4,65,115 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது உள் நாட்டில் விற்பனையான 4,17,256 வாகனங்கள் மற்றும் 47,859 வானகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான விற்பனை என்கள் ஆகும். இந்த நிதியாண்டில் முதல் இரண்டு மாதங்கள் அதாவது ஏப்ரல் மே மாதங்களில் மட்டும் இந்நிறுவனம் மொத்தம் 9,45,979 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள் நாட்டில் மட்டும் 840155 வாகனங்களும், வெளிநாட்டில் 105824 வானகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் தற்போது தனது பிரிமியம் டீலர் ஷிப்கள் மூலம் விற்பனை செய்யும் வாகன்ங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. இந்த செக்மெண்டில் அந்நிறுவனம் ரெபெல் 500, எக்ஸ்-அட்வெஞ்சர், சிபி 750 ஹார்னட், சிபி 1000 ஹார்னட் எஸ்பி, மற்றும் பிளாக்ஷிப் வாகனமான கோல்டு விங் டூடர் ஆகிய வாகனங்களை அறிமுகம் செய்து விற்பனைசெய்து வருகிறது.
இது போக CB650R and CBR650R E-Clutch ஆகிய வானகங்கள் இந்த மாதம் விற்பனைக்கு அறிமுகமாகிறது. இது மட்டுமல்ல சமீபத்தில் இந்நிறுவனம் சர்வதேச அளவில் 5 கோடியாவது வாகனத்தை தயாித்து புதிய மைல் கல்லை எட்டி பிடித்தது. சுமார் 76 ஆண்டுகளில் இந்நிறுவனம் இந்த சாதனையை படைத்துள்ளது. ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் குஜராத் ஆலையில் புதிய தயாரிப்பு லைனை உருவாக்கி தனது தயாரிப்பு கொள்ளளவை உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில் ஹோண்டா நிறுவனம் சைலெண்டாக சிடி 110 டிரீம் பைக்கை விற்பனையிலிருந்து நிறுவனத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு அறிமுகமாகி 11ஆண்டுகள் தொடர்ந்து விற்பனையிலிருந்த பைக்கை தற்போது தனது பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த பைக்கின் விற்பனை வெறும் இரட்டை லக்க அளவில் இருந்ததால் இதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஷைன் 100 பைக் அதன் விற்பனையில் இருந்து வருகிறது.
ஹோண்டா நிறுவனம் தற்போது சிஎஸ்ஆர் ஆக்டிவிட்டியிலும் சிறப்பாக செயல்படுகிறது. சமீபத்தில் 13 நகரங்களில் அதன் ஆக்டிவிட்டியை விரிவுபடுத்தியது. தமிழகத்தில் கூட, செங்கல்பட்டு மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் இந்த ஆக்டிவிட்டி நடத்தப்பட்டது. ஐதரபாத் டிராஃபிக் போலீஸ் உடன் சேர்ந்து சாலை பாதுகாப்பிற்கான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த செயல்பாடுகள் நிச்சயம் பலரை ஈர்க்கும் வகையில் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் டூவீலர் விற்பனை சிறப்பாக இருக்கிறது. இந்த வாகனத்தை நம்பி ஒரே மாதத்தில் 4.65 லட்சம் பேர் நம்பி வாங்கியுள்ளனர். இது மிகப்பெரிய அளவில் வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த நிறுவனத்தின் வளர்ச்சி மிகப்பெரிய சாதனையை படைத்து வரும் நிலையில் தொடர்ந்து இந்த வாகனங்கள் விற்பனை அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









