ஹோண்டா ஷோரூம்ஸ் எல்லா நேரமும் ஆக்டீவ்வாவே இருக்கு! விற்பனை அந்த மாதிரி...!!

ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்தும் மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 164 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஹோண்டா 2-வீலர்ஸின் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 5 லட்சத்து 38 ஆயிரத்து 852 யூனிட்களை விட 5.44% (29,312 யூனிட்கள்) அதிகமாகும்.

மாதாந்திர விற்பனை அளவிலும் ஹோண்டா வளர்ச்சி கண்டுள்ளது. ஆகஸ்ட் 2025-ல் விற்பனையான 5,34,861 ஹோண்டா இருசக்கர வாகனங்களுடன் ஒப்பிடும்போது, செப்டம்பரில் 6.23% (33,303 யூனிட்கள்) வளர்ச்சி அடைந்துள்ளது. ஹோண்டா 2-வீலர்ஸின் ஒட்டுமொத்த விற்பனையில், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை மட்டும் 5 லட்சத்து 5,693 யூனிட்கள் ஆகும்.

honda 2-wheelers sales in september 2025

மீதி 62 ஆயிரத்து 471 இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு கடந்த செப்டம்பர் மாதத்தில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். அதாவது, கடந்த மாதத்தில் ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியா நிறுவனம் மொத்தமாக விற்பனை செய்தவற்றில் 11% வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். இந்த நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாத (4,91,678 யூனிட்கள்) விற்பனையை விட 2.85% (14,015 யூனிட்கள்) அதிகரித்துள்ளது.

ஹோண்டா 2-வீலர்ஸின் ஏற்றுமதியும் கடந்த ஆண்டு செப்டம்பர் (47,174 யூனிட்கள்) மாதத்தை விட 32.43% (15,297 யூனிட்கள்) உயர்ந்துள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (2025 ஜூலை- செப்டம்பர்) ஹோண்டா மொத்தம் 16 லட்சத்து 18 ஆயிரத்து 403 இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது.

honda 2-wheelers sales in september 2025

இது கடந்த 2025 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் ஹோண்டா விற்பனை செய்த 15 லட்சத்து 60 ஆயிரத்து 804 இருசக்கர வாகனங்களை விட 3.69% (57,599 யூனிட்கள்) அதிகம் ஆகும். கடந்த 3 மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட 16 லட்சத்து 18 ஆயிரத்து 403 2-வீலர்களில், இந்தியாவில் ஹோண்டாவின் உள்நாட்டு விற்பனை மட்டும் 14 லட்சத்து 53 ஆயிரத்து 45 யூனிட்கள் ஆகும்.

இது கடந்த ஆண்டை விட 2.15% (30,888 யூனிட்கள்) அதிகம் ஆகும். அதேபோல், கடந்த 3 மாதங்களில் ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் ஏற்றுமதியும் 19.54% (27,028 யூனிட்கள்) அதிகரித்து 1 லட்சத்து 65 ஆயிரத்து 358 யூனிட்களாக உயர்ந்துள்ளது. இருப்பினும், கடந்த 6 மாத கால ஹோண்டாவின் விற்பனை எண்ணிக்கைகளை மொத்தமாக கணக்கிட்டு பார்த்தால், கடந்த ஆண்டில் இதே 6 மாதங்களில் பதிவான எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளது.

honda 2-wheelers sales in september 2025

கடந்த 6 மாதங்களில் மொத்தமாக 29 லட்சத்து 91 ஆயிரத்து 24 ஹோண்டா 2-வீலர்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு விற்பனையான 31 லட்சத்து 13 ஆயிரத்து 596 ஹோண்டா 2-வீலர்களை விட 3.94% (1,22,572 யூனிட்கள்) குறைவு ஆகும். இதற்கு முக்கிய காரணமாக, கடந்த 6 மாதங்களில் ஹோண்டா 2-வீலர்ஸின் உள்நாட்டு விற்பனை 5.54% (1,57,199 யூனிட்கள்) குறைந்து 26 லட்சத்து 79 ஆயிடத்து 507 யூனிட்களாக பதிவாகி உள்ளது.

ஆனால், ஏற்றுமதி 12.51% (34,627 யூனிட்கள்) அதிகரித்து 3 லட்சத்து 11 ஆயிரத்து 517 யூனிட்களாக அதிகரித்துள்ளது. ஹோண்டா 2-வீலர்ஸ் இந்தியா நிறுவனத்தின் அடையாளமே அதன் ஆக்டிவா (Activa) ஸ்கூட்டர் ஆகும். இந்தியாவிலேயே அதிக பேர் வாங்கும் ஸ்கூட்டராக தற்சமயம் ஹோண்டா ஆக்டிவா விளங்குகிறது.

honda 2-wheelers sales in september 2025

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் இரண்டின் விற்பனையும் சமநிலையில் உள்ளது. சிறந்த மைலேஜ் (Mileage) மற்றும் எளிதாக இயக்கக்கூடிய வாகனங்களை நகர்ப்புறவாசிகள் அதிகம் விரும்புவதால், ஸ்கூட்டர்களின் விற்பனை சற்று வேகமான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது.

நிலையான உள்நாட்டு விற்பனை மற்றும் வலுவான ஏற்றுமதி செயல்திறன் மூலம் இருசக்கர வாகனச் சந்தையில் HMSI தனது நிலையைத் தொடர்ந்து பலப்படுத்தி வருகிறது. ஹோண்டாவின் கடந்த 2025 செப்டம்பர் மாத புள்ளி விவரங்கள், அனைத்து தயாரிப்பு வாகனங்களிலும் வாடிககையாளர்களின் நிலையான ஆர்வத்தை பிரதிபலிக்கின்றன. மெட்ரோ மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் ஸ்கூட்டர்கள் வேகமாக வளர்ந்து வருவதையும் இவை வெளிக்காட்டுகின்றன.

More from DriveSpark

Article Published On: Sunday, October 5, 2025, 8:07 [IST]
English summary
Honda 2 wheelers sold 568164 vehicles in september 2025 check all details here
மேலும்... #honda motorcycle #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X