31 நாளில் 6.5 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க! இதுல இவ்வளவு விஷயம் இருக்குதா?
ஹோண்டா டூவீலர் நிறுவனம் கடந்த அக்டோபர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது.அதன்படி இந்நிறுவனம் கடந்த அக்டோர் மாத விற்பனையில் வளர்ச்சியை சந்தித்துள்ளது. இந்நிறுவனம் ஏற்றுமதியில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதை ஈடுகட்டும் அளவிற்கு உள்ளூர் விற்பனை அதிகமாகியுள்ளது. இது குறித்தவிரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் பிரபலமான டூவீலர் நிறுவனமாக இருக்கிறது.இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் வாகனங்களை வறி்பனை செய்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆக்டிவா ரேஞ்ச் ஸ்கூட்டர்கள் அதாவது ஆக்டிவா 110, ஆக்டிவா 125, ஆக்டிவா ஐ ஆகிய வாகனங்கள் சேர்த்து மொத்தம் 3.5 கோடி வாகனங்களை இதுவரை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை மைல் கல்லாக பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோர் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது.இந்நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் செய்த விற்பனை மற்றம் நடப்பு நிதியாண்டு விற்பவனை குறித்த விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம்.

ஹோண்டா நிறுவனம் கடந்த அக்டோர் மாதம் மொத்தம் 6,50,596 வாகனங்களை விற்பவனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 5,98,952 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 51,644 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்தாண்டு அக்டோர் மாத விற்பனையை பார்க்கும் போது மொத்தம் 5,97,711 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. அதை ஒப்பிட்டால் கடந்த அக்டோர் மாதம் 52.885 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 8.85 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பெற்றுள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் உள்நாட்டில் 5,53,120 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. வெளிநாட்டிற்கு 44,591 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதை ஒப்பிட்டால் உள்நாட்டுவ விற்பனையில் 45,832 வாகனங்கள் கூடுதலாகவும், ஏற்றுமதியில் 7053 வாகனங்கள் கூடுதலாகவும்வ விற்பனவையாகியுள்ளது. உள்நாட்டு விற்பனையில் 8.29 சதவீத வளர்ச்சியையும், ஏற்றுமதியில் 15.82 சதவீத வளர்ச்சியையும் அந்நிறுவனம் பெற்றுள்ளது.

இதுவே கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் 5,68,164 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. அதை ஒப்பிட்டால் கடந்த அக்டோபர் மாதம் 82,432 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 14.51 சதவீதம் விற்பனை அதிகமாகியுள்ளது. இதில் உள்நாட்டு விற்பனையில் கடந்த செப்டம்பர் மாதம் 5,05,693 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதில் கடந்த அக்டோபர் மாதம் 93259 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 18.44 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை பொருத்தவரை கடந்த செப்டம்பரில் 62471 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது. தற்போது 10827 வாகனங்கள் குறைவான ஏற்றுமதியாகியிருந்தது. 17.33 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் மொத்தம் 36,41,612 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 32,78,451 வாகனங்கள் விற்பவனையாகியுள்ளது. 3,63,161 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 37,56,088 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. தற்போது 1,14,476 வாகனங்கள் குறைவாக விற்பனையாகியுள்ளது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் சிறப்பாக விற்பனையை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு 5 விநாடிக்குள் ஒரு பைக்கை தயாரித்து வருகிறது. இந்த செய்தியை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நேரத்திற்குள் இந்நிறுவனம் 10க்கும் மேற்பட்ட பைக்ககளை தயாரித்திருக்கும். ஆச்சரியமான தகவலாக இருக்கிறது அல்லவா? இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









