டிவிஎஸ், சுஸுகியை வெடவெடத்து போக வைத்த ஹோண்டா ஸ்கூட்டர்! விலை இவ்ளோதானா! செல்போன் மாதிரி வித்துகிட்டு இருக்கு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இந்திய ஸ்கூட்டர் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய தயாரிப்பு என ஹோண்டா ஆக்டிவாவை கூறலாம். எனவே அறிமுகம் செய்யப்பட்டு 2 தசாப்தங்களை கடந்திருந்தாலும் கூட, இன்னமும் இந்திய வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக ஹோண்டா ஆக்டிவா இருக்கிறது.

இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் கடந்த 2001ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 14 ஆண்டுகள் கடந்த நிலையில், அதாவது கடந்த 2015ம் ஆண்டில், 1 கோடி யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை (Sales Milestone) ஹோண்டா ஆக்டிவா எட்டியது.

2025 Honda Activa 110

இதற்கு அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது கடந்த 2018ம் ஆண்டில், 2 கோடி யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை, ஹோண்டா ஆக்டிவா கடந்தது. இந்த வரிசையில் தற்போது 3.5 கோடி யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை ஹோண்டா ஆக்டிவா கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 24 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக 3.5 கோடி ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது மிகவும் பிரம்மாண்டமான சாதனை என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. நாங்கள் ஏற்கனவே கூறியதை போல், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், இன்னமும் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக உள்ளது.

Suzuki Access 125

தற்போதைய நிலையிலும் கூட, இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டராக இருப்பது ஹோண்டா ஆக்டிவாதான். எனவே வரும் காலங்களிலும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர், விற்பனையில் இன்னும் பல்வேறு மைல்கற்களை கடக்கும் என நாம் உறுதியாக நம்பலாம். ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் தற்போதைய நிலையில் மொத்தம் 3 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110), ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) மற்றும் ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa E) ஆகியவை ஆகும். இதில், ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில், 109.51 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.73 பிஹெச்பி பவரையும், 8.9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப விலை 74,369 ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் ஹோண்டா ஆக்டிவா 125 மாடலில், 123.92 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.3 பிஹெச்பி பவரையும், 10.15 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலை 88,339 ரூபாயாக இருக்கிறது.

அதே நேரத்தில் ஹோண்டா ஆக்டிவா இ ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்திய சந்தையில் ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான். இதில், 3 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் ரேஞ்ச் (Range) 102 கிலோ மீட்டர்கள் ஆகும். இதன் ஆரம்ப விலை 1,17,428 ரூபாயாக உள்ளது. இவை அனைத்துமே ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மற்றும் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access) போன்ற ஸ்கூட்டர்களுக்கு எல்லாம், ஹோண்டா ஆக்டிவா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன் ஆகும். நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடிய, ஒரு நம்பகத்தன்மை வாய்ந்த ஸ்கூட்டரை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு, ஹோண்டா ஆக்டிவா நல்ல ஆப்ஷன்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 30, 2025, 15:31 [IST]
English summary
Honda activa 3 5 crore sales milestone all you need to know
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+