லிட்டருக்கு 45கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரை வாங்க கட்டுக்கடங்காத கூட்டம்! டிவிஎஸ்-இன் கை ஓங்க ஆரம்பிக்குது
நம் இந்தியாவில் பைக்குகளை வாங்குவோருக்கு இணையாக ஸ்கூட்டர்களையும் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான மக்கள் வாங்குகின்றனர். இந்த எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் டாப்-10 இடங்களை பிடித்த ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த பல வருடங்களாகவே அதிக கஸ்டமர்களால் வாங்கப்படும் ஸ்கூட்டராக முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) பிடித்து வருகிறது. இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஆக்டிவா கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 66 ஆயிரத்து 739 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிக பேரால் வாங்கப்பட்ட ஸ்கூட்டராக முதலிடத்தை பிடித்திருப்பினும், கடந்த 2024ஆம் ஆண்டு ஜனவரி உடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் 7 ஆயிரத்து 21 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஏனெனில், அந்த மாதத்தில் சுமார் 1 லட்சத்து 73 ஆயிரத்து 760 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெறும் 1 லட்சத்து 20 ஆயிரத்து 981 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த லிஸ்ட்டில், ஆக்டிவாவுக்கு அடுத்து 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 7 ஆயிரத்து 847 ஆகும்.

இது வழக்கமாக விற்பனை செய்யப்படும் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை விட 20,000- 30,000 அதிகமாகும். இதற்கடுத்து 3வது இடத்தில் சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் 54 ஆயிரத்து 587 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. இது வழக்கமாக ஒரு மாதத்தில் ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படும் எண்ணிக்கையே ஆகும்.
4வது இடத்திலும் சுஸுகியின் மற்றொரு ஸ்கூட்டரான பர்க்மேன் 25 ஆயிரத்து 607 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. அதுவே, 2024 ஜனவரியில் 15 ஆயிரத்து 869 பர்க்மேன் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 5வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக எலக்ட்ரிக் ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப் உள்ளது.

கடந்த மாதத்தில் மொத்தம் 24 ஆயிரத்து 991 டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது இடத்தில் ஹோண்டா டியோ 24,882 யூனிட்கள் விற்பனை உடன் இருக்க, 7வது இடத்திலும் மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஓலா எஸ்1 24,336 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே டிவிஎஸ் எண்டார்க் (23,795), பஜாஜ் சேத்தக் (21,045) மற்றும் யமஹா ரே இசட்.ஆர் (15,209) உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவாவை தவிர்த்து வேறெந்த ஸ்கூட்டரும் இந்தியாவில் ஒரு மாதத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டது இல்லை. ஆனால், கடந்த மாதத்தில் அந்த நிலைமையை டிவிஎஸ் ஜூபிட்டர் மாற்றியுள்ளது. இதனால், வரும் மாதங்களில் ஆக்டிவாவை விற்பனையில் ஜூபிட்டர் முந்துவதற்கும் வாய்ப்புள்ளதாக பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









