சொந்த செலவில் சூன்யம் வைத்து கொண்ட ஹோண்டா.. இததான எதிர்பாத்துட்டு இருந்தீங்க! ஷோரூமுக்கே வர தொடங்கிருச்சு!

ஹோண்டா (Honda) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஷோரூம்களுக்கு வர தொடங்கி இருக்கின்றது. இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்தே தற்போது ஆக்டிவா இ: (Honda Activa e:) மாடலை விற்பனைக்காக ஷோரூம்களுக்கு அனுப்பி வைக்கத் தொடங்கி இருக்கின்றது, ஹோண்டா நிறுவனம். இதை உறுதிப்படுத்தக் கூடிய படங்களே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா (Honda Activa) இருக்கின்றது. இதன் விற்பனையில் புதிய வரவான ஆக்டிவா இ: லேசான பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதாவது, வழக்கமான ஐசிஇ எஞ்சின் கொண்ட ஆக்டிவாவை வாங்குவதற்கு பதிலாக பலரும் மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவா இ: மாடலை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Honda activa e starts reaching dealerships

எனவேதான் பலரும் சொந்த செலவில் அந்நிறுவனம் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொண்டதாக கருதுகின்றனர். இருப்பினும் மறுபக்கம் பெட்ரோல் ஆக்டிவாவிற்கான டிமாண்ட் எப்போதுமே குறையாது. குறிப்பாக, ஆக்டிவா எலெக்ட்ரிக் வெர்ஷனின் வருகையால் மிகப் பெரிய பாதிப்புகள் அதில் ஏற்படாது என்கிற கருத்துகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன.

அதேவேளையில், நிறுவனத்தின் திட்டமும் புதிய வாடிக்கையாளர்களை இந்த ஸ்கூட்டரின் பக்கம் கவர வேண்டும் என்பதாகவே உள்ளது. இதன் அடிப்படையிலேயே மின்சார அவதாரத்தில் உருவாக்கப்பட்ட ஹோண்டா ஆக்டிவா இ: மாடலை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மேலும், அதனை ஷோரூம்களுக்கும் அந்நிறுவனம் அனுப்பி வைக்கத் தொடங்கி உள்ளது.

Honda activa e front view

ஹோண்டா ஆக்டிவா: இந்தியாவில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். ஸ்டாண்டர்டு மற்றும் ரோடு சிங்க் ஆகியவையே அவை ஆகும். முதல் ஒன்று ரூ. 1.17 லட்சம் என்கிற விலையிலும், இரண்டாவது ஒன்று ரூ. 1.52 லட்சம் என்கிற விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். கழட்டி மாட்டும் வசதிக் கொண்டு இரண்டு பேட்டரி பேக்குகள் இதில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. 1.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே இரண்டு இதில் வழங்கப்பட்டு இருக்கும். இதில் ஓர் முழு சார்ஜில் 102 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

Honda activa e front view

Source: Team BHP அதேவேளையில், இந்த ஸ்கூட்டரை வீட்டு வைத்து சார்ஜ் செய்ய முடியாது. பேட்டரி ஸ்வாப் மையங்கள் வாயிலாக மட்டுமே முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி வாங்கி பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதன் வாயிலாக சில நிமிடங்களில் பேட்டரியை மாற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்துக் கொள்ள முடியும்.

சார்ஜ் செய்யப்பட்ட அந்த பேட்டரிகளுக்கு கணிசமான அளவில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுபற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்கள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும்.

இதனால் வெறும் 7.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. ஈகோ (ECO), ஸ்டாண்டர்டு (Standard) மற்றும் ஸ்போர்ட் (Sport) ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஆக்டிவா ஐசிஇ சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதே வரவேற்பே ஆக்டிவா இ: மாடலுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப கவர்ச்சியான தோற்றம் மற்றும் அதிக பிரீமியம் அம்சங்களை தாங்கியதாக அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆனால், இப்போது இந்தியாவின் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, March 3, 2025, 11:04 [IST]
English summary
Honda activa e electric scooter has arrived at dealerships in india more details
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X