ஆக்டிவா இ ஸ்கூட்டரின் விலை இவ்ளோ தானா!.. இத வீட்டுல வச்சு சார்ஜ் செய்ய முடியாதாமே உண்மையா?..

ஹோண்டா (Honda Motorcycle and Scooter India) நிறுவனம் அதன் பெரிது எதிர்பார்க்கப்பட்ட ஆக்டிவா இ: (ACTIVA e:) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலைகளை அறிவித்திருக்கின்றது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) வாயிலாகவே அதன் விலைகளை ஹோண்டா நிறுவனம் அறிவித்திருக்கின்றது. ரூ. 1.17 லட்சம் என்கிற விலையே ஆக்டிவா இ: மாடலுக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் பெங்களூரு எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

விலை அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளையும் ஹோண்டா நிறுவனம் தற்போது தொடங்கி இருக்கின்றது. ஆயிரம் ரூபாய் முன் தொகையிலேயே ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகள் ஏற்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக இந்த ஸ்கூட்டருக்கு இந்தியாவின் மூன்று நகரங்களில் மட்டுமே புக்கிங்குகள் ஏற்கப்படுகின்றது.

Honda activa e scooter price

பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகரங்களிலேயே ஆக்டிவா இ: முதலில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. அதிலும், முதலில் பெங்களூரு நகரத்திலேயே டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. இதற்கு பின்னரே டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது.

தமிழகத்தின் ஒரு நகரம்கூட நிறுவனத்தின் பட்டியலில் இல்லாதது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விரைவில், சென்னை போன்ற இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் ஆக்டிவா இ: விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது. மொத்தமாக ஐந்து விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்திருக்கின்றது.

பேர்ல் செரனிட்டி ப்ளூ (Pearl Serenity Blue), பேர்ல் மிஸ்டி ஒயிட் (Pearl Misty White), மேட் ஃபாக்கி சில்வர் மெட்டாலிக் (Matt Foggy Silver Metallic), பேர்ல் இக்னியஸ் பிளாக் (Pearl Igneous Black) மற்றும் பியர்ல் ஷேலோவ் ப்ளூ (Pearl Shallow Blue) ஆகியவையே அவை ஆகும்.

ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பல்வேறு நவீன அம்சங்களைத் தாங்கிய வாகனமாக ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அந்தவகையில், ஓர் முழு சார்ஜில் 102 கிமீ ரேஞ்சை தரும் வகையில் இதை ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. இதற்காக 1.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்குகள் இரண்டு இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இரண்டும் கழட்டி மாட்டும் வசதிக் கொண்டவை ஆகும். இதை வீட்டில் வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியாது. ஸ்வாப்பிங் மையங்களைப் பயன்படுத்தி மட்டுமே சார்ஜ் செய்து அதை பயன்படுத்த முடியும். இதற்காக ஹோண்டா நிறுவனம் ஹோண்டா மொபைல் பவர் பேக் இ: ( Honda Mobile Power Pack e:) எனும் ஸ்வாப்பபிள் பேட்டரி சிஸ்டத்தை உருவாக்கி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 'பேட்டரி அஸ் எ சர்வீஸ்' (Battery-as-a-Service) எனும் திட்டத்தின்கீழும் வாங்கிக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இதற்காக இரண்டு திட்டங்களை ஹோண்டா அறிவித்திருக்கின்றது. 1,999 ரூபாய் திட்டம் மற்றும் 3,599 ரூபாய் திட்டம் ஆகியவையே அவை அந்த திட்டங்கள் ஆகும்.

இதில் முதல் திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 40 கிமீ தூரம் வரை மட்டுமே இலவசமாக பயணித்திக் கொள்ள முடியும். இதேபோல், இரண்டாவது திட்டத்தில் நாள் ஒன்றிற்கு 100 கிமீ தூரம் வரை மட்டுமே பயணித்துக் கொள்ள முடியும். முக்கிய சிறப்பம்சமாக ஆக்டிவா இ: எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.0 அங்குல அளவிலா டிஎஃப்டி திரை போன்றவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை 6 kW திறன் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலும், இதற்கு பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட வெறும் 7.3 செகண்டுகளே போதுமானது ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மாடலாக ஆக்டிவா இருக்கின்றது. இதில் எலெக்ட்ரிக் வெர்ஷனை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பது ஆக்டிவா ஸ்கூட்டர் காதலர்களைக் கவரும் விதமாக அமைந்திருக்கின்றது. இதற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, January 17, 2025, 15:02 [IST]
English summary
Honda activa e electric scooter launched at bharat mobility global expo 2025 for rs 1 17 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+