ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1 தான் செலவு! ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு புதிய பிளான்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இந்தியாவில் களம் இறக்கப்போகும் ஆக்டிவா இ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான குறைந்த விலை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த திட்டம் அதிகமான விலையில் இருந்த நிலையில் இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா ஆக்டிவா நிறுவனம் ஆக்டிவா இ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய மார்கெட்டில் அணிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் பேட்டரி ஸ்வாப்பிங் தொழிற்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டருக்கான பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷன்களை குறிப்பிட்ட நகரங்களில் ஹோண்டா நிறுவனம் அமைத்து வருகிறது.

இதனால் இந்த வாகனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் பேட்டரி காலியானதும் ஸ்வாப்பிங் ஸ்டேஷனிற்கு சென்று பேட்டரியை ஸ்வாப் செய்துவிட்டு தங்கள் பயணத்தை தொடரலாம். பேட்டரியை சார்ஜ் போட காத்திருக்க வேண்டிய தேவை கிடையாது. பேட்டரியின் ஆயுள் குறித்த கவலையும் வேண்டாம். ஹோண்டா நிறுவனம் இந்த பேட்டரியை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற முறையில் விற்பனை செய்கிறது.
ஹோண்டா நிறுவனம் இதற்கு முன்னர் இந்த திட்டத்தின் பிளான்களை அறிவிக்கும் போது பேஸ் பிளானாக ரூ1999க்கு 35kWh அளவில் பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் ரூ3599 செலவில் 82 kWh அளவில் பேட்டரியை மாற்றிக்கொள்ளலாம் என்றும் 2 விதமான பிளான்களை அறிவித்திருந்தது. ஆனால் இந்த பிளான் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் நோக்கத்தையே பலன் இல்லாதததாக மாற்றுவதாக கருத்து எழுந்தது.

எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் பலர் பெட்ரோல் வாகனங்களை வாங்கிய பிறகு போது ஆகும் செலவுகளை இது கணிசமாக குறைக்கும் என்ற நோக்கத்தில் தான் வாங்குகிறார்கள். பெட்ரோல் செலவை விட மின்சார செலவு குறைவாக இருக்கும் என கருதுகின்றனர். ஆனால் ஹோண்டா அறிவித்த பிளானிற்கான தொகை அதிகமாக இருப்பதாக கருத்து எழுந்தது.
இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் குறைந்த விலையில் ஒரு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி மாதம் ரூ678 செலுத்தினால் 20kWh அளவிலான பேட்டரியை மாற்றும் படி பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் சேவையை பயன்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது. ஒரு பேட்டரி 3kWh பவரை கொண்டது. இது முழு சார்ஜில் 102 கி.மீ ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படி பார்த்தால் 20kWh பவருக்கு 6-7 முறை பேட்டரியை மாற்ற முடியும். அப்பொழுது 600-700 கி.மீ வரை தாராளமாக பயணிக்கலாம். அப்படி கணக்கிட்டால் ஒரு கி.மீ பயணிக்க ஒரு ரூபாய் தான் செலவாகும். ஒருளு நாளுக்கு சராசரியாக 23 கி.மீ பயணிப்பவர்கள் இந்த பிளானை தேர்வு செய்யலாம். இதுவே அட்வான்ஸ்டு பிளான் என்றால் 87kWh பவரை பயன்படுத்த முடியும். அதவாது 25-26 பேட்டரியை மாற்ற முடியும். அதன் மூலம் 2500-2600 கி.மீ பயணிக்கலாம். அதற்கு ரூ4000 செலுத்த வேண்டும்.அப்படி கணக்கிட்டால் கி.மீக்கு ரூ1.6 செலவாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனம் தற்போது குறைந்த விலையில் கொண்டு வந்திருக்கும் திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது மக்களுக்கான பயண செலவுகளை கணிசமாக குறைக்கும் என தெரிகிறது. இதனால் இந்த வாகனம் விற்பனைக்கு வரும் போது பலர் இதை வாங்குவார்கள் எனவும் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









