2இல் ஒன்றை தேர்வு செய்வதுதான் இருப்பதிலேயே கஷ்டம்! ஹோண்டா தன்னோட முழு அனுபவத்தில் உருவாக்கிய இ-ஸ்கூட்டர்கள்!
ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹோண்டா ஆக்டிவா இ (Activa e) மற்றும் க்யூ.சி1 (QC1) என்பன அந்த இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவை இரண்டையும் ஓட்டிப் பார்த்து சமீபத்தில் எங்களது விரிவான ரிவியூவை வழங்கி இருந்தோம். இந்த தொகுப்பில் பார்க்க போவது, இந்த இரு ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை & வேற்றுமைகளை ஆகும். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
தோற்றம் & விலை: தோற்றத்தில் ஆக்டிவா இ மற்றும் க்யூசி1 என இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன. தோற்றத்தை காஸ்ட்லீயானதாக காட்ட வேண்டும் என்பதற்காக ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மட்டுமே சில கவர்ச்சிக்கரமான அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால், ஆக்டிவா இ ஸ்கூட்டரின் விலை குறைவான வெர்சனாக க்யூசி1 விளங்குகிறது.

புதிய க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90,000-இல் இருந்தும், ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.17 லட்சத்தில் இருந்தும் துவங்குகின்றன. ஆக்டிவா இ ஆனது விலைமிக்க டாப் வேரியண்ட்டிலும் விற்பனை செய்யப்பட உள்ளது. டாப் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.52 லட்சம் ஆகும்.
பேட்டரி & ரேஞ்ச்: ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1.5kWh திறன் கொண்ட இரு பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை தேவை என்றால், ஸ்கூட்டரில் இருந்து நீக்கிக் கொள்ளலாம். இதனால், பேட்டரியை தனியாக கழற்றி எடுத்து சென்று வீட்டிற்குள் சார்ஜ் போடவும் முடியும். அதுமட்டுமின்றி, பேட்டரி ஸ்வாப்பிங் (Swapping) முறையை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பணிகளிலும் ஈடுப்பட்டு வருவதாக ஹோண்டா 2-வீலர் தெரிவித்து வருகிறது.

அதாவது, சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து கூடுதல் கட்டணத்தை செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெறும் முறைக்கு பெயர் தான், பேட்டரி ஸ்வாப்பிங் ஆகும். ஆக்டிவா இ ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 102கிமீ தொலைவிற்கு இயங்கலாம். மறுப்பக்கம், க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 1.5 திறன் திறன் கொண்ட பேட்டரி தான் வழங்கப்பட்டுள்ளது; ஆனால், ஒரேயொரு பேட்டரி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாகவே 80கிமீ தொலைவிற்கு மட்டுமே ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல முடியும். இதைவிட முக்கியம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டரில் இருந்து பேட்டரியை தனியாக கழற்றி எடுக்க முடியாது. இந்த 1.5kWh பேட்டரியை 0- 100% சார்ஜ் நிரப்ப சுமார் 6 மணிநேரம் 50 நிமிடங்கள் தேவைப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மற்ற அம்சங்கள்: சஸ்பென்ஷனுக்கு இந்த ஸ்கூட்டர்கள் இரண்டிலும் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், இரு ஸ்கூட்டர்களிலும் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாலும், ஆக்டிவா இ ஸ்கூட்டரில் முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், க்யூசி1 ஸ்கூட்டரில் டிரம் பிரேக்கும் வழங்கப்படுகின்றன.
இவற்றுடன், ஆக்டிவா இ ஸ்கூட்டரில் கீலெஸ் ஸ்டார்ட், கனெட்டிவிட்டி வசதி உடன் டிஎஃப்டி வண்ண இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரை 3 ரைட் மோகள், ஒரு ரிவர்ஸ் மோட் உள்ளிட்டவையும், க்யூசி1 ஸ்கூட்டரில் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 2 ரைட் மோட்கள், இருக்கைக்கு அடியில் 26 லிட்டர்கள் கொள்ளளவில் ஸ்டோரேஜ் பகுதி உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோற்றத்தில், தொழிற்நுட்ப அம்சங்களில் மற்றும் விலைகளில் மட்டும் இல்லாமல், மொத்தமாகவே பார்ப்பதற்கு ஹோண்டா ஆக்டிவா இ ஸ்கூட்டரை காட்டிலும், க்யூசி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அளவில் சிறியதாக உள்ளது. இதனால், கல்லூரி மாணவர்கள், முதியவர்கள் போன்றோர் சிறிய ஏரியாவிற்குள் சுற்றுவதற்கு புதிய க்யூசி1 ஏற்றதாக இருக்கும். அதேநேரம், சில கிமீ தொலைவிற்கு பயணம் செய்து அலுவலகம் செல்ல வேண்டும் அல்லது வேலை தொடர்பாக சுற்றுவதற்கு ஆக்டிவா இ ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









