ஹோண்டா ஆக்டிவா இ vs சுஸுகி இ-அக்செஸ்.. ரெண்டில் எது பெஸ்ட்?.. இதோ முழுமையான ஒப்பீட்டு தகவல்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) பிரிவு இந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது. இந்த பிரிவின் இப்போதைய மிகப் பெரிய தலையாக பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak) இருக்கின்றது. முன்னதாக நம்பர் 1 இடத்தில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) இருந்து வந்தது. இந்த இடத்தை தற்போது பஜாஜ் சேத்தக் ஆக்கிரமித்து உள்ளது. டிசம்பர் மாதத்திலேயே இந்த சம்பவத்தை பஜாஜ் சேத்தக் செய்தது. இந்த நிலையிலேயே மேலும் இரண்டு முன்னணி ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக எலெக்ட்ரிக் அவதாரத்தில் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

ஹோண்டா நிறுவனம் அதன் ஆக்டிவா ஸ்கூட்டரின் மின்சார (Honda Activa e:) வெர்ஷனையும், சுஸுகி நிறுவனம் அதன் அக்செஸ் மாடலின் மின்சார (Suzuki e-Access) வெர்ஷனையும் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றன. இந்த இரண்டில் எது பெஸ்ட் என்கிற விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இரண்டு இ-ஸ்கூட்டர் மாடல்களையும் ஒப்பீடு செய்து அது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாங்க இதுகுறித்த விரிவான தகவலைப் பார்க்கலாம்.

Honda activa e vs suzuki e-access comaparison

ஹோண்டா ஆக்டிவா இ: மற்றும் சுஸுகி இ-அக்செஸ்-இன் பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச் விபரங்கள்: ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா இ: ஸ்கூட்டரில் 1.5 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கையே வழங்குகின்றது. இந்த திறன் கொண்ட இரண்டு பேட்டரி பேக்குகள் அதில் வழங்கப்பட்டு இருக்கும். இரண்டுமே கழட்டி மாட்டும் திறன் கொண்டவை ஆகும்.

ஓர் முழு சார்ஜில் இதில் 102 கிமீ ரேஞ்சை வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், சுஸுகி இ-அக்செஸ் ஸ்கூட்டர் மாடலில் 3.07 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எல்எஃப்பி வகை பேட்டரி பேக் ஆகும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ஆக்டிவா இ: மாடலைக் காட்டிலும் குறைவான ரேஞ்ச் திறன் ஆகும்.

ஹோண்டா ஆக்டிவா இ: மற்றும் சுஸுகி இ-அக்செஸ்-இன் மின்சார மோட்டார் பற்றிய விபரம்: ஆக்டிவா இ: ஸ்கூட்டர் மாடலில் 6 kW மற்றும் 22 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். ஈகோ, ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்போர்ட் ஆகிய ரைடிங் மோட்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

அதேவேளையில், சுஸுகி இ-அக்செஸ் ஸ்கூட்டர் மாடலில் 4.1 kW மற்றும் 15 என்எம் டார்க் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 71 கிமீ ஆகும். இதிலும் மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹோண்டா ஆக்டிவா இ: மற்றும் சுஸுகி இ-அக்செஸ் இடையே இருக்கும் சிறப்பம்சம் வேறுபாடு: ஹோண்டா இ: ஸ்கூட்டரில் பலதரப்பட்ட சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், எல்இடி லைட், 5 அங்குல டிஎஃப்டி திரை, 7 அங்குல ஆன்ட்ராய்டு திரை, ரிவர்ஸ் மோட், திரையின் பிரகாசத்தை மாற்றிக் கொள்ளும் வசதி, சைடு ஸ்டாண்டு இன்டிகேட்டர் மற்றும் ஸ்மார்ட் சாவி சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதேபோல் சுஸுகி இ-அக்செஸ் மாடலில் நிறைய பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை, திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன், செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்தியை அறிந்துக் கொள்ளும் வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்மார்ட் சாவி, அலர்ட் வசதி மற்றும் சைடு ஸ்டாண்டு அலர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இ: மற்றும் சுஸுகி இ-அக்செஸ் இரண்டிற்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாத நிலையே உள்ளது. அதேவேளையில், ரேஞ்ச் தரும் விஷயத்திலும், திறன் வெளிப்பாட்டிலும் இ-அக்செஸ் மாடலைக் காட்டிலும் ஆக்டிவா இ: சற்றே சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது.

இ-அக்செஸ் மாடலின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவிலேயே அது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ரூ. 1.17 லட்சம் விலையே ஹோண்டா ஆக்டிவா இ-க்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதற்கு சவால் அளிக்கும் விலையே இ-அக்செஸ்-க்கு நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 21, 2025, 22:20 [IST]
English summary
Honda activa e vs suzuki e access comaparison details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+