ஹோண்டா ஆக்டிவாவை தோற்கடிக்க இனி ஒரு ஸ்கூட்டர் பொறந்துதான் வரணும்! ஒரே மாதத்தில் 1.75 லட்சம் ஸ்கூட்டர்களா...!

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்புறத்தில் வசிப்போரின் முதன்மையான தேர்வாக ஸ்கூட்டர் மாறி வருகிறது. ஏனெனில், நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு கியர்கள் இல்லாத ஸ்கூட்டர்களே சிறந்தவை ஆக விளங்குகின்றன. இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்தியாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக வழக்கம்போல் முதலிடத்தில் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 74 ஆயிரத்து 9 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2024 பிப்ரவரியில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்திருந்தது.

honda activa most selling scooter

இந்த வகையில் பார்த்தால், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 26 ஆயிரத்து 125 யூனிட்கள் குறைந்துள்ளது. ஆனால், இந்த 2025ஆம் ஆண்டு ஜனவரியில் வெறும் 1 லட்சத்து 66 ஆயிரத்து 739 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, ஜனவரியை காட்டிலும் பிப்ரவரியில் 7,270 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆக்டிவாவுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டராக 2வது இடத்தில் டிவிஎஸ் ஜூபிட்டர் 1 லட்சத்து 3 ஆயிரத்து 576 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2024 பிப்ரவரியில் வெறும் 73 ஆயிரத்து 860 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

honda activa most selling scooter

3வது இடத்தில் உள்ள சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஆனது 59 ஆயிரத்து 39 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 பிப்ரவரியில் 56 ஆயிரத்து 473 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு இருந்தன. 4வது மற்றும் 5வது இடங்களில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters)-ஆன டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் உள்ளன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 23,581 மற்றும் 21,240 ஆகும்.

அதுவே, 2024 பிப்ரவரியில் இவை முறையே 15,792 மற்றும் 13,620 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 6வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார்ஸின் ஸ்டைலிஷான பெட்ரோல் ஸ்கூட்டரான எண்டார்க் 20,992 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. 2024 பிப்ரவரியில் 24,911 எண்டார்க் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

honda activa most selling scooter

டிவிஎஸ் எண்டார்க் ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக உள்ள ஹோண்டா டியோ இந்த வரிசையில் 7வது இடத்தில் உள்ளது. 2024 பிப்ரவரியில் 29,649 டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 16,028 டியோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

8வது இடத்தில் 14,445 யூனிட்கள் விற்பனை உடன் ஹீரோ டெஸ்டினி ஸ்கூட்டர் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக இருப்பினும், 8வது இடத்தில் உள்ள டெஸ்டினி தான் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர் ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டின் கடைசி 2 இடங்களான 9வது மற்றும் 10வது இடங்களில் யமஹா ரே இசட்.ஆர் (14,010) மற்றும் ஹீரோ பிளஷர் (11,656) உள்ளன.

honda activa most selling scooter

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா ஆக்டிவா இந்த வரிசையில் முதலிடத்தை பிடிக்கும் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்ததே. ஆக்டிவாவுக்கு இணையாக, கடந்த சில வருடங்களாக டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல், சைலைண்டாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் இந்த லிஸ்ட்டில் முன்னேற்றம் கண்டு வருகின்றன.

Take a Poll

More from DriveSpark

Article Published On: Friday, March 21, 2025, 11:50 [IST]
English summary
Honda activa indias most selling scooter as usual in february 2025 sales
மேலும்... #scooters #bike sales #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X