ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை மக்கள் ஏன் கண்ண மூடிட்டு வாங்கறாங்க தெரியுமா? இதெல்லாம்தான் உண்மையான காரணம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் (Scooters) ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் ஹோண்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,74,009 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,00,134 ஆக இருந்தது. இது 13.05 சதவீத வீழ்ச்சி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் கூட நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப் 10 ஸ்கூட்டர்களின் (Top 10 Scooters) பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் வழக்கம் போல முதல் இடத்தை பிடித்து அசத்தி இருக்கிறது.

2025 Honda Activa 110

இந்த பட்டியலில் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஸ்கூட்டர் 2வது இடத்தை பிடித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,03,576 ஜூபிடர் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. முதல் இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவாவிற்கும், 2வது இடத்தில் உள்ள டிவிஎஸ் ஜூபிடருக்கும் இடையே விற்பனை எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசத்தை இங்கே காணலாம்.

இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் மொத்தம் 2 வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை ஹோண்டா ஆக்டிவா 110 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 ஆகியவை ஆகும். இந்த 2 வெர்ஷன்களுக்குமே இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

Suzuki Access 125

இதில், ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் 109.51 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 5.88 kW பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.05 NM டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் (Ground Clearance) 162 மிமீ ஆகும். இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு (Fuel Tank Capacity) 5.3 லிட்டர்களாக உள்ளது. அதே நேரத்தில் ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அவை ரீபெல் ரெட் மெட்டாலிக், பியர்ல் சைரன் ப்ளூ, பியர்ல் ப்ரீசியஸ் ஒயிட், பியர்ல் இக்னீசியஸ் ப்ளாக், டீசென்ட் ப்ளூ மெட்டாலிக் மற்றும் மேட் ஆக்ஸிஸ் க்ரே மெட்டாலிக் ஆகியவை ஆகும். ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டர் மொத்தம் 3 வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதில், STD OBD2B வேரியண்ட்டின் விலை 85,222 ரூபாய் ஆகவும், DLX OBD2B வேரியண்ட்டின் விலை 94,741 ரூபாய் ஆகவும், SMART OBD2B வேரியண்ட்டின் விலை 97,742 ரூபாய் ஆகவும் உள்ளது. இவை அனைத்துமே சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை (Chennai Ex-Showroom Price) என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில், 123.92 சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 6.20 kW பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 10.5 NM டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரை போல், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் க்ரவுண்ட் க்ளியரன்சும் 162 மிமீ-ஆகதான் உள்ளது. அதேபோல் இதன் பெட்ரோல் டேங்க் கொள்ளளவும் 5.3 லிட்டர்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த 2 விஷயங்களில் 2 ஸ்கூட்டர்களிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை.

அதே நேரத்தில் கலர் ஆப்ஷன்களை பொறுத்தவரையில், ஹோண்டா ஆக்டிவா 110 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு வரும் டீசென்ட் ப்ளூ மெட்டாலிக் மட்டும், ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் கிடையாது. அதற்கு பதிலாக பியர்ல் டீப் க்ரவுண்ட் க்ரே கலர் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. மற்றபடி இந்த 2 ஸ்கூட்டர்களிலும், எஞ்சிய 5 கலர் ஆப்ஷன்களிலும் எந்தவொரு மாற்றமும் இல்லை.

ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரானது மொத்தம் 2 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில், 125 DISC வேரியண்ட்டின் விலை 1,00,223 ரூபாய் ஆகவும், 125 SMART வேரியண்ட்டின் விலை 1,04,229 ரூபாய் ஆகவும் உள்ளன. இவையும் சென்னை எக்ஸ்-ஷோரூம் விலைதான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. அத்துடன் இதன் மைலேஜ், நடைமுறை பயன்பாடு மற்றும் விலை ஆகிய அம்சங்களும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்க கூடிய அம்சங்களில் முதன்மையாக இருக்கின்றன. அத்துடன் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் பராமரிப்பு செலவும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றதாக உள்ளது.

மேலும் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் மறுவிற்பனை மதிப்பு, அதாவது ரீசேல் வேல்யூவும் (Resale Value) அதிகமாக இருக்கிறது. குறிப்பிட்ட காலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பயன்படுத்தி விட்டு விற்பனை செய்தால் கூட, சந்தையில் நல்ல விலைக்கு, இந்த ஸ்கூட்டரை விற்பனை செய்ய முடியும்.

இது போன்ற காரணங்களால்தான் ஹோண்டா ஆக்டிவா, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டராக திகழ்கிறது. ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. அதாவது இந்த ஸ்கூட்டர் முதன் முதலில் கடந்த 2001ம் ஆண்டுதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஆனால் இத்தனை வருடங்களுக்கு பிறகு இன்றளவும் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்ற ஸ்கூட்டர்களில் ஒன்றாக ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது. இதற்கு நாங்கள் மேலே கூறியுள்ள நம்பகத்தன்மை, மைலேஜ், நடைமுறை பயன்பாடு, விலை மற்றும் ரீசேல் வேல்யூ ஆகியவைதான் மிகவும் முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

இந்திய சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 110 (Hero Maestro Edge 110), ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் (Hero Pleasure Plus), டிவிஎஸ் ஜெஸ்ட் 110 (TVS Zest 110) மற்றும் ஹோண்டா டியோ (Honda Dio) ஆகிய ஸ்கூட்டர்களுக்கு எல்லாம் ஹோண்டா ஆக்டிவா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக கருதப்படுகிறது.

அத்துடன் இந்திய சந்தையில் ஹீரோ டெஸ்ட்டினி 125 (Hero Destini 125), சுஸுகி ஆக்ஸெஸ் 125 (Suzuki Access 125) மற்றும் யமஹா ஃபஸினோ 125 (Yamaha Fascino 125) ஆகிய ஸ்கூட்டர்களுக்கும் கூட ஹோண்டா ஆக்டிவா மிகச்சிறந்த மாற்று ஆப்ஷன்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 28, 2025, 23:56 [IST]
English summary
Honda activa sales report february 2025 13 per cent down
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+