டிவிஎஸ் கம்பெனிக்கு இப்போவே அல்லு இல்ல... ஹோண்டா பைக்கின் விலையை பார்த்து ஷாக்கான 2-வீலர் மார்க்கெட்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் முற்றிலும் புதிய சிபி125 ஹார்னெட் (CB125 Hornet) மோட்டார்சைக்கிள் வெளியீடு செய்யப்பட்டது. பைக்கை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியிடப்பட்ட நிலையில், விலைகள் மட்டும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது, எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) அறிவிக்கப்பட்டு புதிய சிபி125 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் அதிகாரப்பூர்வமாக மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன், புதிய சிபி125 ஹார்னெட் பைக்கிற்கான முன்பதிவுகளும் (Bookings) நாடு முழுவதும் துவங்கப்பட்டு உள்ளன.

honda cb125 hornet bike bookings start

ஹோண்டா நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே சில ஹார்னெட் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலமாக, 'ஹார்னெட்' என்கிற வார்த்தை மக்கள் மத்தியில் பிரபலமானதாக இருக்கும் நிலையில், அதனை பயன்படுத்திக் கொள்ளும் முயற்சியாக, குறைந்த விலையில் சிபி125 ஹார்னெட் மோட்டார்சைக்கிளை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.

குறிப்பாக, இளம் தலைமுறையினரை கவரும் வகையில் அசத்தலான தோற்றம் மற்றும் அதிநவீன வசதிகள் உடன் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிபி125 ஹார்னெட் பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்து 12 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹோண்டா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விலை ஆனது சலுகை விலை என்றும் குறுகிய காலத்திற்கு மட்டுமே இருக்கும் என்றும், அதன்பின் உயர்த்தப்படும் என்றும் ஹோண்டா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

honda cb125 hornet bike bookings start

புதிய ஹோண்டா சிபி125 ஹார்னெட் பைக்கை வாங்க விரும்புபவர்கள் ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தை அல்லது அருகில் உள்ள ஹோண்டா டீலர்ஷிப் ஷோரூமை அணுகலாம். ஸ்ட்ரீட்ஃபைட்டர் உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சிபி125 ஹார்னெட் பைக் பருத்த வடிவிலான பெட்ரோல் டேங்க் மற்றும் ஸ்டைலிஷான மஃப்லர் (Muffler) உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லெமன் ஐஸ் மஞ்சள் உடன் பேர்ல் சைரன் நீலம், பேர்ல் இக்னியஸ் கருப்பு, அத்லெட்டிக் நீலம் மெட்டாலிக் உடன் பேர்ல் சைரன் நீலம் மற்றும் ஸ்போர்ட்ஸ் சிவப்பு உடன் பேர்ல் சைரன் நீலம் என நான்கு விதமான கலர் ஆப்ஷன்களில் சிபி125 ஹார்னெட் பைக் கிடைக்கும். முழுவதும் எல்இடி விளக்குகளால் சூழப்பட்ட இந்த பைக்கில் ஹேண்டில்பாருக்கு மத்தியில் 4.2 இன்ச்சில் டிஎஃப்டி டிஸ்பிளே ஆனது ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டுள்ளது.

honda cb125 hornet bike bookings start

பயணிகளின் கூடுதல் பாதுகாப்புக்கு சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் உருவாக்கப்படும் புதிய சிபி125 ஹார்னெட் பைக்கில் 123.94சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8.2 கிலோவாட்ஸ் மற்றும் 11.2 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 125சிசி என்கிற சிறிய அளவிலான என்ஜின் உடன் ஸ்டைலிஷான பைக்கை விற்பனை செய்ய பல 2-வீலர் நிறுவனங்கள் துவங்கி உள்ளன. டிவிஎஸ் ரைடர் (TVS Raider) பைக்கில் துவங்கிய இந்த டிரெண்ட் அதன்பின் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R) பைக்கை தொடர்ந்து தற்போது ஹோண்டா சிபி125 ஹார்னெட் பைக் வரையில் வந்துள்ளது. இந்த மூன்று 125சிசி பைக்குகளில் எதை வாங்க விரும்புகிறீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 16:22 [IST]
English summary
Honda announced price of cb125 hornet bike bookings also opened
மேலும்... #honda #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X