விலை இவ்வளவு கம்மியா? பல்சர் மார்கெட்டை காலியாக்க போற பைக் இது தான்!

ஹோண்டா நிறுவனம் தனது சிபி 125 ஹார்னட் என்ற பைக்கை விரைவில் அறிமுகப்படுத்துகிறது. சமீபத்தில் அந்நிறுவனம் தனது நிறுவனத்தின் 25வது ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக இந்த 2 புதிய பைக்குகளை வெளியிட்டிருந்தது. அதில் அந்த பைக்குடன் சேர்த்து ஷைன் 100டிஎக்ஸ் பைக்கும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஹார்னட் பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டாவின் ஹஆர்னட் பைக்கை பொருத்தவரை 123.94 சிசி ஏர்கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மாசுகட்டுப்பாட்டுடன் இயங்கும் வகையில் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்படுத்த ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.

Honda CB125 Hornet

இந்த இன்ஜின் 11 எச்பி பவரையும் 11.2 எச்பி டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் இந்த கிளாஸிலேயே சிறந்த ஆக்ஸிலரேஷனை வழங்குகிறது. இந்த பைக் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 5.4 நொடியில் பிக்கப் செய்து விடும் தறின் கொண்டதாக இருக்கிறது. மேலும் இந்த பைக் மொத்தம் 124 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.

இந்த பைக்கின் வடிவமைப்பில் எடை பகிர்வு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் துடிப்பாகவும் அதே நேரம் ஹேண்டிலிங்கிற்கு சிறப்பான ரெஸ்பான்ஸ் தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செகச்மெண்டிலேயே முதன் முறையாக யூஎஸ்டி ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் உள்ள லைட்டிங் எல்லாம் எல்இடி லைட்டிங்களாக வழங்கப்பட்டுள்ளன. பின்பக்கம் மோனோஷாக் சன்பென்சன் வழங்கப்பட்டுள்ளது.

Honda CB125 Hornet

இந்த பைக்கில் 4.2 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத் கனெக்டிவிட்டி ஆப்ஷன் உடன் கிடைக்கிறத. இந்த பைக்கில் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் கால், எஸ்எம்எஸ் அலர்ட் உள்ளிட்ட பல முக்கியமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பைக்கில் 17 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த பைக் 125 சிசி செக்மெண்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் பஜாஜ் பல்சர் என்எஸ் 125, டிவிஎஸ் ரைடர் மற்றும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125 ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களம் இறங்குகிறது. இந்த பைக்கின் வருகைக்காக பலர் காத்திருக்கிறார்கள். பல்சருக்கு போட்டியாக இந்த பைக் விற்பனையாகும் என தெரிகிறது.

இந்த பைக்கின் புக்கிங்கை அந்நிறுவனம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் புக்கிங்கை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் விலை மற்றும் விற்பனை குறித்த விபரங்கள் எல்லாம் அன்றே தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் மார்கெட்டில் விற்பனைக்கு வரும் போது ரூ1.15 லட்சம் முதல் ரூ 1.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த ஹோண்டா சிபி 125 ஹார்னட் பைக் மார்கெட்டில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் வாகனமாக இருக்கிறது. இந்த வாகனம் மக்கள் மத்தியில் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டது. இது நிச்சயம் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, July 26, 2025, 17:45 [IST]
English summary
Honda cb125 hornet launch soon expected price details
மேலும்... #bajaj auto #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+