வெறும் ரூ2.01 லட்சம் தான்! ராயல் என்ஃபீல்டை ஓரம் கட்டப்போகும் பைக் இது தான்!
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது மிட்-சைஸ் மோட்டார் சைக்கிளின் அணிவகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. சிபி 350 சி என்ற ஸ்பெஷல் எடிசன் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தின் இதன் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரூ2.01 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் தனது சிபி 350 பைக்கி சிபி 350 சி என இந்த பைக் மூலம் ரீ பிராண்ட் செய்துள்ளுது. இது இந்தியாவில் கிளாசிக் மோட்டார் சைக்கிள் ரசிகர்களை கவர்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் சிபி 350 சி பேட்ஜ் தனித்துவமான ஸ்பெஷல் எடிசன் ஸ்டிக்கர் உடன் ஃப்யூயல் டேங்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த செக்மெண்டில் தனக்கென ஒரு ஐடென்டிட்டியை உருவாக்க இதை அந்நிறுவனம் செய்துள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்கில் டேங்க் பகுதியில் ஸ்டிரிப் கிராஃபிக்ஸ் வழங்கபப்ட்டுள்ளது. இது இந்த பைக்கின் பிரிமியம் மற்றும் போல்டான் அப்பீலை மேம்படுத்துகிறது. கூடுதலாக குரோம் கிராப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு அல்லது பிரெளன் நிற சீட்கள் இந்த பைக்கின் ரெட்ரோ வடிவமைப்பை மேம்படுத்துகிறது. இந்த பைக் ரெபல் ரெட், மேட் டியூன் பிரெளன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கில் மார்டன் அம்சங்களுடன் கிளாசிக் ஸ்டைலிங் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இதில் ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. நேவிகேஷன் மற்றும் நோட்டிஃபிகேஷனிற்காக அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல், டுயல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

இந்த பைக்கில் 348.36 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் இ20 பெட்ரோலுக்கு தகுந்தவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 15.5 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இது 29.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிட்டி மற்றும் ஹைவே ரைடிங்கிற்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை இந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பிங்விங் டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பைக்கிற்காக புக்கிங் ஏற்கனவே துவங்கிவிட்டது. ஆன்லைன் அல்லது டீலர்ஷிப் மூலம் இந்த பைக்கை புக்கிங் செய்யலாம். ஆனால் அக்டோபர் முதல் வாரத்தில் தான் இந்த பைக்கின் டெலிவரி கிடைக்கும்.
இந்த பைக் நேரடியாக ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாக களம் இறங்குகிறது. ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு இந்தியா மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. இதனால் பலர் இந்த வாகனத்தை வாங்க ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு பதிலாக இதை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் நிச்சயம் ராயல் என்ஃபீல்டு பைக்கிற்கு போட்டியாக களம் இறங்கும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் ஹோண்டா பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இதில் ரெட்ரோ லுக்கை விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை அதிகம் விரும்ப வாய்ப்புள்ளது. இது நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








