இந்தியாவுக்கே பிடிச்ச ஹோண்டா பைக் இனி கிடைக்காதா! விற்பனையை திடீரென நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா பைக்குகள் (Honda Bikes) மிகுந்த நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. இதில், ஹோண்டா சிடி 110 ட்ரீம் (Honda CD 110 Dream) பைக் மிகவும் முக்கியமானது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதாவது ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 11 ஆண்டுகள் கடந்துள்ளன. ஆரம்பத்தில் ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கின் விற்பனை எண்ணிக்கை நன்றாகவே இருந்தது. ஆனால் சமீப காலமாக ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கின் விற்பனை சொல்லி கொள்ளும்படியாக இல்லை.

Honda CD 110 Dream

கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8,511 ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 33 ஆக சரிந்தது. இதன் காரணமாக ஹோண்டா நிறுவனம் தற்போது சிடி 110 ட்ரீம் பைக்கின் விற்பனையை அதிகாரப்பூர்வமாக நிறுத்தியுள்ளது.

ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கில், 109.51 சிசி ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8.6 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது.

Honda Shine 100

இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது. ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கின் வீழ்ச்சிக்கு, ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) பைக்கின் வருகை முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 பைக் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய சந்தையில் தற்போது அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா ஷைன் 100 திகழ்கிறது. இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 98.98 சிசி இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 5.43 kW பவரையும், 5,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 68,794 ரூபாய் என்ற விலையில் ஹோண்டா ஷைன் 100 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கிற்கு மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக ஹோண்டா ஷைன் 100 கருதப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை கம்யூட்டர் பைக்குகளில் ஒன்றாக ஹோண்டா சிடி 110 ட்ரீம் இருந்தது. சரியான விலை நிர்ணயம் மற்றும் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்கள் உள்ளிட்ட காரணங்களால், ஹோண்டா சிடி 110 ட்ரீம், வாடிக்கையாளர்களின் மனம் கவர்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக திகழ்ந்தது.

தற்போது அதன் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பதன் மூலம், ஹோண்டா சிடி 110 ட்ரீம் பைக்கின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இருப்பினும் அதற்கு மாற்றாக ஹோண்டா ஷைன் 100 பைக் விற்பனையில் இருப்பது, ஆறுதலான விஷயம். ஹோண்டா ஷைன் 100 பைக்கும் விலை குறைவானது என்பதால், வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2025, 12:47 [IST]
English summary
Honda cd 110 dream discontinued in india check all details here
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+