இதைவிட கம்மியான விலையில் தர முடியாது! இளைஞர்கள் தான் மொத டார்க்கெட்டே - சைலன்சரில் புகையை பார்க்க மாட்டீங்க!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் ஸ்கூட்டர்களுள் ஹோண்டா டியோ 125 (Dio 125) ஒன்றாகும். இதனாலேயே அவ்வப்போது டியோ ஸ்கூட்டரை ஹோண்டா அப்டேட் செய்துவிடுகிறது.

அந்த வகையில் தற்போது மேம்படுத்தப்பட்ட 2025 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் மேம்படுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய டியோ 125 ஸ்கூட்டரின் புனே எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.96,749 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய டியோவில் மிக முக்கியமாக, ஒபிடி-2பி (OBD-2B) அப்டேட் கொண்டுவரப்பட்டுள்ளது.

2025 honda dio 125

மத்திய அரசாங்கத்தின் தொடர் வலியுறுத்தலால் சமீப நாட்களாக இந்த ஒபிடி-2பி அப்டேட்டை பைக் மற்றும் ஸ்கூட்டர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பெற்று வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து ஸ்பிளெண்டர் (Splendor) மற்றும் பேஷன் புரோ (Passion Pro) பைக்குகள் சமீபத்தில் இந்த அப்டேட் உடன் விற்பனைக்கு வந்தன.

அவற்றை தொடர்ந்து தற்போது ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் அதன் பிரபலமான ஸ்கூட்டர்களுள் ஒன்றான டியோ 125 -ஐ ஒபிடி-2பி அப்டேட் உடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த அப்டேட்டின்படி, வாகனத்தில் இருந்து வெளியிடப்படும் காற்று மாசுவின் அளவை எப்போதும் கண்காணிக்கும் கருவியும், வாகனத்தில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதுகுறித்து டிரைவரிடம் எச்சரிக்கும் கருவியும் இருக்க வேண்டும்.

2025 honda dio 125

ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரில் வழக்கமாக வழங்கப்படும் 123.92சிசி, சிங்கிள்-சிலிண்டர், PGM-Fi என்ஜின் தான் புதிய 2025 டியோ 125 ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், என்ஜின் உடன் புதியதாக ஐடிலிங் ஸ்டாப் சிஸ்டம் (Idling Stop System) வழங்கப்பட்டுள்ளதால், ஸ்கூட்டரின் எரிபொருள் திறன் மேம்பட்டுள்ளது. இதன் மூலமாக, முந்தைய டியோ 125 ஸ்கூட்டரை காட்டிலும் புதிய வெர்சனில் கூடுதல் மைலேஜ் (Mileage) கிடைக்கும்.

டியோ 125 ஸ்கூட்டரில் பொருத்தப்படும் என்ஜின் அதிகப்பட்சமாக 6.11 கிலோவாட்ஸ் மற்றும் 10.5 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. புதிய டியோ 125 ஸ்கூட்டரின் நீளம், அகலம், உயரம் போன்ற பரிமாண அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை என்றாலும், ஸ்கூட்டரில் ஒட்டப்படும் கிராஃபிக்ஸில் ஹோண்டா மாற்றங்களை செய்துள்ளது.

2025 honda dio 125

அதேபோல், புதியதாக கலர் ஆப்ஷன்களும் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய தொழிற்நுட்ப அம்சங்களாக 4.2 இன்ச் திரை உடன் டிஎஃப்டி டிஸ்பிளே (TFT Display) வழங்கப்பட்டுள்ளது. இது, ஸ்கூட்டரின் மைலேஜ், பயண தூரம், ரேஞ்ச் மற்றும் இண்டிகேட்டர் சிக்னல் போன்ற வழக்கமான விபரங்களை காட்டுவதுடன், ப்ளூடூத் மூலமாக மொபைல் போன் உடன் இணைக்கக்கூடியதாகவும் உள்ளது.

இதன் மூலமாக, மொபைல் போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை ஸ்கூட்டரின் திரையின் வாயிலாகவே கண்ட்ரோல் செய்யலாம். அத்துடன், பயணத்திற்கான வழிக்காட்டுதலையும் புதிய 4.2 டிஸ்பிளே மூலமாக பெறலாம். இதற்காக 'ஹோண்டா ரோடுசிங்க்' (Honda Roadsync) என்கிற செயலியை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டியிருக்கும்.

இது இல்லாமல், ஸ்மார்ட் கீ, யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி மற்றும் என்ஜின் ஸ்டார்ட்/ ஸ்டாப் சிஸ்டம் போன்ற வழக்கமான வசதிகளையும் 2025 ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டர் கொண்டுள்ளது. டி.எல்.எக்ஸ் (DLX) மற்றும் எச்-ஸ்மார்ட் (H-Smart) என 2 விதமான வேரியண்ட்களில் புதிய டியோ 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ரூ.96,749 விலை ஆனது டிஎல்எக்ஸ் வேரியண்ட் உடையது ஆகும். எச்-ஸ்மார்ட்டின் விலை ரூ.1,02,144 ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா டியோ 125 ஸ்கூட்டரை அதிகமாக இளம் தலைமுறையினர் வாங்குகின்றனர். இதனாலேயே புதிய டியோ 125 ஸ்கூட்டரை இளைஞர்களுக்கு ஏற்ற கிராஃபிக்ஸில் ஹோண்டா வழங்கியுள்ளது. ஆனால், புதிய டியோ 125 ஸ்கூட்டர் முக்கியமாக ஒபிடி-2பி அப்டேட்டிற்காக தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டியோ 125 ஸ்கூட்டர் மட்டுமின்றி, டியோ 110 ஸ்கூட்டரும் விற்பனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 16, 2025, 18:12 [IST]
English summary
Honda dio 125 gets obd 2b update new price features all details here
மேலும்... #honda motorcycle #dio #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X