சென்னை டூ வேலூர் சிங்கிள் சார்ஜ்ல போகலாம்! இந்த வண்டி விலையும் கம்மி தான்!
ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை சீனாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இ-விஓ என பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் சீனாவில் உள்ள குவாங்சூ என்ற நிறுவனத்துடன் இணைந்து வூவாங்- ஹோண்டா என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த பைக் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
உலகம் முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை அதிகமாகி வருகிறது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை இங்கு அதிகமாகியுள்ள நிலையில் அடுத்த கட்டமாக இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனை தான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹோண்டா நிறுவனம் தனது இ-விஓ எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகப்படுத்தியள்ளது.

ஹோண்டா இ-விஓ பைக் அநறநிறவனத்தன் முதல் எலெக்ட்ரிக் பைக் ஆகும். இதைஅந்நிறுவனம் வூவாங் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ள நிலையில் இதில் இரண்டு விதமான பேட்டரி பேக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது 4.1 கிலோ வாட் ஹவர் மற்றும் 6.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 4.1 கிலோ வாட் ஹவர் பேட்டரி முழு சார்ஜில் 120 கிலோ மீட்டர் பயணிக்கும் என சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக் 143 கிலோ எடை கொண்டதாக வடிவமைக்கப்படுகிறது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 1.30 மணி நேரம் ஆகிறது. இது வீட்டில் உள்ள சார்ஜரை பயன்படுத்தும் போது சார்ஜ் ஏறும் நேரமாக இருக்கிறது. கார் சார்ஜரை பயன்படுத்தினால் வெறும் 1 மணி நேரம் தான் ஆகும்.

பெரிய பேட்டரி பேக்கான 6.2 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக் முழு சார்ஜில் 170 கி.மீ ரேஞ்சை வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 156 கி.மீ ரேஞ்சை வழங்குகிறது.இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 2 மணி நேரம் 30 நிமிடம் எடுத்துக்கொள்கிறது. ஹோம் சார்ஜரில் சார் ஏறும் நேரம் இது. இதுவே கார் சார்ஜிரில் 14 மணி நேரம் 30நிமிடம் தான் எடுத்துக்கொள்கிறது.
இந்த இரண்டு வேரியன்ட் பைக்கிலும் ஒரே விதமான மோட்டார் தான் பொருத்தப்பட்டுள்ளது. இது 15.3 கிலோ வாட் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அலுமிமனியம் பாடி ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஏபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் மொத்தம் 3 விதமான ரைடு மோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எக்கோ, நார்மல், ஸ்போர்ட் ஆகிய ரைடு மோடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதே போல மற்றொரு டிஸ்பிளே நேவிகேஷன், மியூசிக், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களுடன் இருக்கிறது. இந்த பைக் கருப்பு மற்றும் வெள்ளை நிற ஆப்ஷன்களில் விற்பனைக்கு வருகிறது. இதன் விலையை பொருத்தவரை ரூ3.56 லட்சம் முதல் ரூ4.39 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்க ஆர்வம் காட்டியள்ள நிலையில் ஹோண்டா நிறுவனம் சீனாவில் இந்த வாகனத்தை தயாரித்து அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியாவில் இந்நிறுவனத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தியாவில் ஹோண்டா வாகனத்தை இவியாக மாற்றினால் நிச்சயம் பெரிய வெற்றியை பெறும்.


Click it and Unblock the Notifications









