செப் 2ல் ஹோண்டா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு! சேல்ஸ் சும்மா பிச்சுக்கப்போகுது!
ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 500 சிசி பைக் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இந்த பைக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. வரும் செப் 2ம் தேதி இந்த பைக் வெளியிடப்படுகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹோண்டா நிறுவனம் சர்வதேச மார்கெட்டில் தனது எலெக்ட்ரிக் பைக் செக்மெண்டை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகிறது. வரும் செப்டம்பம் மாதம் 2ம் தேதி தனது புதிய எலெக்ட்ரிக் பைக்கை வெளியிட் திட்டமிட்டுள்ளது. இது குறித்த டீசர் வீடியோவை அந்நிறுவனம் தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ளது.

ஹேண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டிற்குள் ஏற்கனவே களம் இறங்கிவிட்டது. இந்நிறுவனம் ஆக்டிவா இவி மற்றும் ஆக்டிவா க்யூசி ஆகிய வாகனங்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச மார்கெட்டில் புதிய பைக்குகளை களம் இறங்குகிறது. இந்த பைக்குகள் இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு தான். இந்தியாவில் இந்நிறுவனம் குறைந்த விலை இவிகளை மட்டுமே களம் இறக்க திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான டீசலரில் ஹோண்டா நிறவனம் இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஃபன் கான்செப்டில் உருவாக்கியுள்ளது. இந்த கான்செப்டை கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த கன்செப்டில் தயாரிக்கப்படும் பைக் மிட் சைஸ் பெட்ரோல் இன்ஜின் பைக்கிற்கு இணையான ஃபெர்பார்மென்ஸை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ஒரு 500 சிசி பைக் எப்படியான ஃபெர்பார்மென்ஸை வெளிப்படுத்துமோ அதே மாதிரியான ஃபெர்பார்மென்ஸ் உடன் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பைக் 50 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் டார்க் திறனும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது.
இது போக இந்த பைக்கில் பெரிய டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டிஆர்எல், கிளிப் ஆன் டேப் ஹேண்டில் பார், மேலும் ஹேண்டில் பாரில் மிரர், சிங்கிள் சைடட் ஸ்விங் ஆர்ம், உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம். ரைடிங் போசிஷனை் லேசான ஸ்போர்ட்டினஸ் வழங்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த பைக்கில் சிசிஎஸ் 2 சார்ஜிங் அம்சம் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சங்கள் எலெக்ட்ரிக் கார்களில் தான் வழங்கப்பட்டு வந்தது.
இந்த பைக்கில் இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் 4.1kWh மற்றும் 6.3kWh ஆகிய ஆப்ஷன்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதன்படி 4.1kWh பேட்டரி பேக் வேரியன்ட் 120 கி.மீ ரேஞ்சையும், 6.3 kWh பேட்டரி பேக் வேரியன்ட் 170 கி.மீ ரேஞ்சையும் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வாடிக்கையாளர்களை அதிகம் ஈர்க்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டா நிறுவனத்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இந்நிலையில் இந்நிறுவனம் சர்வதேச அளவில் வெளியிடும் எலெக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் குறைந்த விலையில் இறக்குமதி செய்து விற்பனை செய்தால் விற்பனை சிறப்பாக இரகு்கும். இந்தியாவிலேயே இந்த பைக்கை தயாரித்தால் நிச்சயம் விலை குறைவாக விற்பனை செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications








