தமிழக்திற்கு வருகிறதா ஹோண்டா இவி ஆலை! இங்க தான் எல்லாமே பெஸ்டா இருக்குது!

ஹோண்டா மோட்டார்சைக்கிள்கள் & ஸ்கூட்டர்கள் இந்தியா (HMSI) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் தயாரிப்பை தாமதமாக தொடங்கிய போதிலும், எலெக்ட்ரிக் டூவீலரில் முன்னணியில் இருக்க தயாராகி வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களுக்கு என பிரத்தியேக தொழிற்சாலையில் 2028ம் ஆண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி தொடங்கும். இந்த நடவடிக்கை இந்திய தொழிற்சாலைகளை சர்வதேச ஏற்றுமதி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்துடன் இது ஒத்துப்போகிறது.

HMSI இப்போது இந்தியாவின் இரண்டாவது பெரிய டூவீலர் வாகன உற்பத்தியாளர், ஹீரோ மோட்டோகார்ப் உடனான விற்பனை எண்ணிக்கை இடைவெளியைக் குறைத்து வருகிறது. புதிய எலெக்ட்ரிக் டூவீலர் வசதி உலகின் மிகப்பெரிய டூவீலர் வாகன மார்கெட்டில் குறிப்பிடத்தக்க பங்கைப் பெறும் நோக்கில் உள்ளது. இதோடு, வாங்குவோருக்கு ரேஞ்ச் கவலைகளைப் போக்க, HMSI அதன் பேட்டரி சார்ஜிங் நெட்வொர்க்கை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

Honda Electric Motorcycles

எலெக்ட்ரிக் டூவீலர் உடன் ஒரு முக்கிய சவாலான வாடிக்கையாளர்களுக்கான மொத்த செலவு (TCO) குறைப்பதில் அந்நிறுவனம் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மூன்று ஆண்டுகளில் TCO என்பது கம்பஷன் இன்ஜின் வாகனங்களக்கு ஆகும் செலவுகளுக்கு ஒத்ததாக இருக்கும் வகையில் ஹோண்டா இந்த பைக்குகளை விலை நிர்ணயம் செய்ய விரும்புகிறது. இந்த யுத்தி எலெக்ட்ரிக் டூவீலர் நுகர்வோருக்கு மிகவும் விருப்பமானதாக மாற்றும்.

குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் பேட்டரிகளை வடிவமைக்க ஹோண்டா பல இந்திய பேட்டரி உற்பத்தியாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது. இந்தியாவில் OEM களுக்கு பாகங்களை தொடர்ச்சியான முறையில் பெறுவது மிகவும் முக்கியமானது. உள்ளூர் சப்ளையர்களுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஹோண்டா அதிக உள்ளூர்மயமாக்கல் நிலைகளை அடைய முடியும். இது உள்ளீட்டு செலவுகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கும்.

Honda Electric Motorcycles

தற்போது, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படவுள்ள எலெக்ட்ரிக் டூவீலர்களின் சரியான மாடல்கள் அல்லது பெயர்களை ஹோண்டா வெளிப்படுத்தவில்லை. பொதுவான மாடலைப் பயன்படுத்தி பல்வேறு மாடல்களை வழங்கும் திட்டம், வளர்ச்சி செலவுகளைக் குறைக்கும். இந்த அணுகுமுறை ஹோண்டா போட்டி விலைகளை பராமரிக்க உதவும் அதே நேரத்தில் நுகர்வோருக்கு பல்வேறு விருப்பங்களை வழங்கும்.

சமீபத்தில், HMSI தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வெளியிட்டது: ஆக்டிவா e மற்றும் QC1. QC1 பட்ஜெட் விழிப்புணர்வு கொண்ட வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது, அதே நேரத்தில் ஆக்டிவா e மாற்றக்கூடிய பேட்டரி தொழிற்நுட்பத்தை கொண்ட முன்னணி மாடலாக உள்ளது. மாறாக, QC1 நிலையான பேட்டரியைப் பயன்படுத்துகிறது. ஆனால் ஆக்டிவா e இல் இல்லாத பிராக்கடிக்கல் ஸ்டோரேஜ் இடத்தை வழங்குகிறது.

Honda Electric Motorcycles

இந்த ஸ்கூட்டர்களுடன், ஹோண்டா இந்தியாவின் EV சந்தையில் போட்டித்தன்மையுடன் நுழைகிறது. QC1 க்கு ரூ. 90K (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஆக்டிவா e க்கு ரூ. 1.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற விலையில் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டர்கள் ஒரு சார்ஜில் அதிகபட்சமாக 102 கி.மீ. ரேஞ்சை (ஆக்டிவா e) வழங்கி 80 கி.மீ. வேகத்தை எட்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா எலெக்டரிக் தொழிற்சாலையை நிறுவுவதற்கான காலவரம்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், இந்த வளர்ச்சிகள் இந்தியாவின் வளர்ந்து வரும் மின்சார வாகன துறையில் முக்கிய வீரராக மாற HMSI உறுதிபூண்டுள்ளதைக் காட்டுகிறது. விரைவில் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு இடம் தேர்வு செய்யப்பட்டு ஆலைகள் அமைக்கும் பணி துவங்கும் என எதிர்பார்க்கலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் தமிழகத்தை தேர்வு செய்வதாலும் ஏற்றுமதிக்கு வசதியாக இருக்கும் என்பதாலும் தமிழகத்தில் இந்த ஆலை அமைய வாய்ப்புள்ளது!

More from DriveSpark

Article Published On: Wednesday, January 29, 2025, 13:06 [IST]
English summary
Honda Motorcycles & Scooters India is set to commence electric motorcycle production in 2028. The company is collaborating with local battery manufacturers to enhance electric vehicle offerings while ensuring competitive pricing and high localisation levels.
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X