எழுதி வெச்சிக்கோங்க... இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டர் ஹிட் அடிக்கும்! ஆக்டிவாவை முந்துமா?
ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் (Honda Motorcycles), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் நிறுவனம். ஆக்டிவா மூலம் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் ஹோண்டா நிறுவனம் அடுத்ததாக மிகவும் சிறிய அளவிலான ஸ்கூட்டர் ஒன்றை களமிறக்க போவதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. தற்போது விற்பனையில் இருக்கும் பிரபலமான ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஸ்கூட்டர்களை காட்டிலும் அளவில் சிறியதாக இருக்கும் இந்த புதிய ஹோண்டா ஸ்கூட்டரை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவிற்கென பிரத்யேகமாக புதிய ஸ்கூட்டர் ஒன்றை ஹோண்டா உருவாக்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் டார்க்கெட் செய்யும் வகையில் சிறிய அளவில், குறைந்த விலையிலான ஸ்கூட்டராக இது இருக்கும் என கூறப்படுகிறது. ஆக்டிவா, டியோ ஸ்கூட்டர்களை காட்டிலும் இது அளவில் சிறியதாக இருக்குமாம்.

இந்த அளவிற்கு சிறிய அளவிலான மினி பைக்காக ஹோண்டா நாவி மற்றும் ஹோண்டா க்ளிக் ஸ்கூட்டர் முன்பு விற்பனையில் இருந்தன. ஆனால், அவை இரண்டும் ஹோண்டாவுக்கு பெரியதாக வெற்றி தரவில்லை. அந்த வரிசையில் அடுத்ததாக அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த புதிய ஸ்கூட்டருக்கு ஹோண்டா சூட்டியிருக்கும் பெயர், எஸ்.சி.ஆர்125 ஜிஷா (SCR125 Xisha) ஆகும்.
இந்த பெயருக்கான காப்புரிமையை இந்தியாவில் ஹோண்டா நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதனால், இதனை நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் திட்டத்தில் ஹோண்டா இருக்கலாம். ஆனால், அறிமுகம் எப்போது என்பதுதான் கேள்வியே. இன்னும் சில வாரங்களிலேயே ஹோண்டா எஸ்சிஆர்125 அறிமுகம் செய்யப்படலாம் அல்லது சில வருடங்கள் கூட ஆகலாம்.

இதுபோன்று சிஜி160 (CG 160) என்கிற ஸ்கூட்டருக்கான காப்புரிமையையும் ஹோண்டா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்சிஆர்125 ஆனது தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு ஏதுவான ஸ்கூட்டர் ஆகும். குறிப்பாக, பெண்களுக்கு இது மிகவும் ஏற்ற ஸ்கூட்டராக இருக்கும். இந்த ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் மட்கார்ட் கிடையாது.
அதற்கு பதிலாக ஸ்கூட்டரின் முன்பக்க அப்ரான் பகுதி தாழ்வாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்த ஸ்கூட்டரில் ஹலோஜன் ஹெட்லைட்டும், ஹேண்டில்பாருக்கு அருகே டர்ன் இண்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டருக்கு பின்பக்கத்திலும் ஹலோஜன் டெயில்லைட் தான் வழங்கப்பட்டுள்ளது. ரைடருக்கு முன்பக்கத்தில், ஹேண்டில்பாருக்கு கீழே 2 க்ளோவ் பாக்ஸ் கொடுக்கப்படுகின்றன.

இவற்றுடன், புதிய ஹோண்டா எக்ஸ்சிஆர்125 ஸ்கூட்டரில் யுஎஸ்பி சார்ஜிங் வசதி, வளையாத இரும்பினால் ஆன பின்பக்க ஷெல்ஃப் பகுதி, ஒரே துண்டாக இருக்கை, போதுமான அளவிற்கு ஃப்ளோர்போர்டு, அலாய் சக்கரங்கள், முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் பார்க்கிங் பிரேக் உள்ளிட்டவையும் இடம்பெறுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆக்டிவா மூலமாக ஏற்கனவே அதிக எண்ணிக்கையிலான கஸ்டமர்களை ஹோண்டா பெற்று வருகிறது. அப்படியிருக்கும் போதிலும், மேலும் அதிக கஸ்டமர்களை பெற இவ்வாறு சிறிய அளவிலான ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய ஹோண்டா தயாராகி வருகிறது. ஆனால், இப்போதுவரையில் எக்ஸ்.சி.ஆர்125 ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்த உறுதியான தகவல் எதுவும் இல்லை.


Click it and Unblock the Notifications









