எஸ்யூவி காரை விட அதிக விலையில் அறிமுகமான பைக்! இதுல அப்படி என்னதான் இருக்குது?

ஹோண்டா நிறுவனம் தனது கோல்டு விங் டூர் 50வது அனிவர்சரி எடிசன் பைக்கிற்கான புக்கிங்கை இன்று துவங்கியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என தெரிவிதக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரின் விலையை விட காஸ்ட்லியாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த பைக்கில் என்ன அம்சம் இருக்கிறது? இதன் விலை என்ன? எப்படி புக் செய்வது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா நிறுவனம் தனது பிக் விங் டீலர் ஷிப்கள் வழியாக தனது பிரிமியம் ரக பைக்குகளை விற்பனை செய்து வருகுிறது. இந்த வகையில் அந்நிறுவனத்தின் கோல்டு விங் டூர் பைக் மக்கள் மத்தியில் கவனத்தை பெற்றது. டூரிங் ரக பைக்குகளை விரும்புபவர்கள் இந்த பைக்கை தேர்வு செய்கிறார்கள். இந்த பைக் காஸ்ட்லியாக இருந்தாலும் டூரிங் ரக விரும்பிகள் மத்தியில் பிரபலமான பைக்காக இருக்கிறது.

Honda Gold Wing Tour

இந்த பைக் கடந்த 1975ம் ஆண்டு தான் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பைக் அறிமுகமாகி இந்தாண்டுடன் 50 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் விதமாக 50வது ஆனிவெர்ஷரி எடிசன் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான புக்கிங்கை இன்று துவங்கியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பைக் பார்டெக்ஸ் ரெட் மெட்டாலிக் பெயிண்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை பழைய பைக்கில் உள்ள அதே 1883 சிசி ஃபிளாட் 6 மோட்டார் லிக்யூட் கூல்டு பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 4 ஸ்டோக் இன்ஜின் ஆகும். இதில் 24 வால்வுகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 125 எச்பி பவர் மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 7 ஸ்பீடு டுயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

Honda Gold Wing Tour

ஹோண்டா நிறுவனம் திராட்டல் பை ஒயர் சிஸ்டத்தை இந்த இன்ஜினில் பயன்படுத்துகிறது. பல்வேறு ரைடிங் கண்டிஷன்களுக்கு ஏற்றவாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் எலெக்ட்ரிக்கலி அட்ஜெஸ்டபிள் விண்ட் ஸ்கிரீன், சிறந்த ஆடியோ குவாலிட்டிக்காக ஸ்பீக்க டியூன் செய்யப்பட்டுள்ளது. ஏர்ஃபளோ மேனேஜ்மென்டிற்காக இன்டகிரேன் செய்யப்பட்ட ஏர் வென்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த பைக்கில் 7 இன்ச் டிஎஃப்டி ஸ்கிரீன், உள்ளது. அதில் ஸ்பிளாஸாக "Since 1975" என்ற எழுத்து வரும் வகையில் இது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது போக இதில் நேவிகேஷன், ரைடு குறித்த தகவல்கள் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இருக்கிறது. இதில் வயர்லெஸ் ஸ்மார்ட் ஜபோன் பேரிங் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே சப்போர்ட் உடன் கிடைக்கும். இதை கேபிள் இல்லாமல் வயர்லெஸ் மூலம் செய்ய முடியும்.

Honda Gold Wing Tour

இது போக இந்த பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டுயல் யூஎஸ்பி சி போர்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இரகு்கிறது. இந்த பைக்கில் 4 வீதமான ரைடு மோடுகள் உள்ளன. டூர், ஸ்போர்ட், இயான் மற்றும் ரெயின் ஆகிய ரடு மோடுகள் உள்ளது. இதில் ஒவ்வொரு மோடும் திராட்டல் ரெஸ்பான்ஸ், கியர் ஸ்விஃப்ட்ஸ், பவர் உள்ளிட்ட விஷயங்களில் வேறுபடுகிறது. இந்த பைக்கில் பாதுகாப்பிற்காக டுயல் சேனல் ஏபிஎஸ், டிராக்ஷன் கண்ட்ரோல் இன்டகிரேட் செய்யப்பட்ட ஏர்பேக் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டாவின் இந்த கோல்டு விங் டூர் பைக் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறது. இதன் விலை தான் சற்று அதிகம். ஆனால் இதில் கார்களில் இருக்கும் அம்சங்கள் கூட இருக்கிறது. இந்த பைக்கை வாங்க பலர் ஆசைப்பட்டு வருகின்றனர். இந்த புதிய எடிசன் அதன் ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, May 30, 2025, 16:35 [IST]
English summary
Honda gold wing tour 50th edition launched at rs 39 90 lakh
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X