தென்னிந்தியாவில் மட்டும் 2 கோடி டூ-வீலர்களை விற்பனை செய்த நிறுவனம்.. ஹீரோ கிடையாதுங்க.. அப்போ வேற யாரு அது?

தென்னிந்தியாவில் ஓர் நிறுவனத்தின் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் அந்த நிறுவனம் தெற்கு இந்தியாவில் மட்டுமே தங்களுடைய தயாரிப்புகள் இதுவரை 2 கோடிக்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையாகி இருப்பதாக தகவல் வெளியிட்டு இருக்கின்றது. இந்த தகவலை வெளியிட்டு இருப்பது வேறு யாருமல்ல ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooter India), இந்த நிறுவனமே அந்த தகவலை வெளியிட்டு இருக்கின்றது.

கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் இந்த நிறுவனத்திற்கு முதல் 1 கோடி விற்பனையை எட்ட 17 ஆண்டுகள் ஆகி இருக்கின்றன. அதேவேளையில், ஒரு கோடி விற்பனையை எட்ட வெறும் ஏழு ஆண்டுகளே போதுமானதாக இருந்திருக்கின்றது. இந்த இரண்டு கோடி யூனிட் டூ-வீலர் விற்பனை என்பது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் அந்தமான் - நிக்கோபார் தீவுகளை மட்டுமே உள்ளடக்கியவை ஆகும்.

Honda surpasses 2 crore sales in south india

நிறுவனத்தின் மிக அதிகம் விற்பனையாகும் டூ-வீலர் மாடலில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கம்போல் ஆக்டிவா ஸ்கூட்டரே நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் இரண்டு சக்கர வாகன மாடலாக உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் ஆக்டிவா ஸ்கூட்டரின் மற்றுமொரு வெர்ஷனான ஆக்டிவா 125 மாடலே உள்ளது.

இதன் வாயிலாக இன்னும் பல ஆண்டுகளுக்கு ஹோண்டா ஆக்டிவாவின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டராக ஆக்டிவாவே இருக்கும் என தெரிகின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் ஸ்கூட்டர் மாடல் மட்டுமல்ல இந்திய அளவிலும் இரண்டு சக்கர வாகன விற்பனையில் முன்னணி இடத்தில் இதுவே உள்ளது.

Honda activa-125 picture

குறிப்பு: படங்கள் உதாரணத்திற்காக வழங்கப்பட்டவை. இதற்கேற்ப இந்த ஸ்கூட்டரின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு பலதரப்பட்ட சிறப்பு சலுகைகளை நிறுவனம் வழங்குகின்றது. அந்தவகையில், கடனில் வாங்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பூஜ்ஜியம் புராசஸிங் கட்டணம் (Zero Processing Fees), பூஜ்ஜியம் ஆவண கட்டணம் (Zero Documentation Charges) என்கிற சலுகைகளை நிறுவனம் வழங்குகின்றது.

இதுமட்டுமே இந்த ஸ்கூட்டருக்கு வரவேற்புக் கிடைக்க காரணம் என்று கூறிவிட முடியாது. ஆக்டிவாவின் மீதிருக்கும் அதீத நம்பிக்கை மற்றும் அதன் நீடித்து உழைக்கும் திறனும் அதனை இந்தியர்கள் விரும்பி வாங்கிக் கொண்டிருக்க காரணமாக உள்ளது. அதுமட்டுமின்றி பராமரிப்பு செலவு குறைவு மற்றும் அதிக மைலேஜையும் வழங்கக் கூடியதாக ஆக்டிவா உள்ளது.

இதனாலேயே ஒரு சில வீடுகளில் ஒன்றுக்கும் அதிகமான யூனிட்டுகள் ஆக்டிவா பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இவ்வாறு மக்கள் வாங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே தென்னிந்தியாவில் மட்டும் கடைசி 7 ஆண்டுகளில் மட்டும் ஹோண்டாவின் தயாரிப்புகள் 1 கோடி யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. ரூ. 82,956 என்கிற ஆரம்ப விலையில் இருந்தே இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தென் இந்தியாவில் மட்டும் இதுவரை 2 கோடி இரண்டு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் விற்பனைச் செய்திருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு தெற்கு இந்தியாவில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 19, 2025, 10:13 [IST]
English summary
Honda motorcycle and scooter achieves over 2 crore sales milestone in southern india
மேலும்... #honda motorcycle #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+