யார நம்புறதுனே தெரியல தாஸ் அண்ணா... 13 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும் பைக்கை கூட நம்ப முடியல!!

ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி (Honda CB1000 Hornet SP) மோட்டார்சைக்கிள்களில் கண்டறியப்பட்ட ஒரு குறைபாடு காரணமாக, ஹோண்டா நிறுவனம் உலகளாவிய ரீதியில் இந்த பைக்கை திரும்பப் பெறும் நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக்குகளும் திரும்ப அழைக்கப்படுகின்றன.

2025ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக்குகளில், எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் இருந்து வெளிவரும் அதிகப்படியான வெப்பம், பெயிண்ட் செய்யப்பட்ட இருக்கையின் மேற்பரப்பை மென்மையாக்குவதை ஹோண்டா நிறுவனம் கண்டறிந்துள்ளது. இதனால் கியர் மாற்றும் பெடலின் திருகு (pivot bolt) தளர்ந்து, பயணம் செய்யும்போது கீழே விழக்கூடும்.

honda cb1000 hornet sp recalls

இது கியர் மாற்றும் செயல்பாட்டைப் பாதிக்கலாம். இதனைத் தொடர்ந்து, ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI), இந்தப் பிரச்சனையை சரிசெய்ய தானாக முன்வந்து இந்த விலையுயர்ந்த பைக்குகளை திரும்பப் பெறும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளது. அதாவது, உலகளவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒருபகுதியாக இந்தியாவிலும் இந்த நடவடிக்கையை HMSI கையில் எடுக்கிறது.

பைக்கில் பாதிக்கப்பட்ட பாகங்கள் 2026 ஜனவரி முதல் இந்தியா முழுவதும் உள்ள ஹோண்டாவின் பிக்விங் டாப்லைன் (Bigwing Topline) டீலர்ஷிப்களில் இலவசமாக மாற்றித் தரப்படும். வாகனத்தின் வாரண்டி காலம் முடிந்திருந்தாலும், இந்த சேவைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு, மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் வாகனப் பரிசோதனை குறித்த தகவல்கள் அனுப்பப்படும்.

மேலும், ஹோண்டாவின் இணையதளத்தில் தங்கள் சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக்கின் தனித்துவமான வாகன அடையாள எண்ணை (VIN) உள்ளிட்டு, தங்கள் வாகனம் இந்த நடவடிக்கையின் கீழ் உள்ளதா என்பதையும் சரிபார்த்துக் கொள்ளலாம். டீலர்ஷிப்களில் காத்திருப்பதைத் தவிர்க்க, வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப சேவை சந்திப்பை முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக் ஆனது, கடந்த மே மாதத்தில்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக்கில் 1000சிசி லிக்யுடு-கூல்டு இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 11,000 ஆர்பிஎம்-இல் 157.2 பிஎஸ் ஆற்றலையும், 9,000 ஆர்பிஎம்-இல் 107 என்.எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

இந்த பைக்கில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. முன்புறத்தில் 310 மிமீ இரட்டை டிஸ்க்குகள் மற்றும் பின்புறத்தில் 240 மிமீ சிங்கிள் ரோட்டார் பிரேக்கிங் வசதி உள்ளது. சஸ்பென்ஷனுக்கு, ஷோவா SFF-BP USD ஃபோர்க்ஸ் முன்பக்கத்திலும், ஓஹ்லின்ஸ் மோனோஷாக் யூனிட் பின்பக்கத்திலும் உள்ளன.

ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக்கின் எடை 212 கிலோ ஆகும். இது 135 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம்), தரையில் இருந்து 809 மிமீ உயரத்தில் டிரைவர் சீட் மற்றும் 17 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோல் டேங்கை கொண்டுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.13.29 லட்சம் ஆக தற்சமயம் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒவ்வொரு வாகனமும் பார்த்து பார்த்து உற்பத்தி செய்யப்பட்டாலும், இவ்வாறு வாகனங்கள் பழுதுகளின் காரணமாக திரும்ப அழைக்கப்படுவது வாடிக்கையான ஒன்றே. இருப்பினும், காரின் விலைக்கு இணையாக பல லட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்படும் மோட்டார்சைக்கிள்கள் கூட இவ்வாறு விற்கப்பட்ட பின் திரும்ப அழைக்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அப்படியென்றால், எவ்வளவு விகைமிக்க வாகனங்களில் தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, November 14, 2025, 11:17 [IST]
English summary
Honda motorcycle and scooter india recalls cb1000 hornet sp bikes check all details here
மேலும்... #honda motorcycle #recall #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+